Oct 11, 2026 - 06:18 PM

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 க்கு 20 போட்டி இன்று (11) இடம்பெறுகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

இந்தப் போட்டிக்காக இலங்கை அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், சினேத் ஜெயவர்தன, சமிந்து விக்ரமசிங்க மற்றும் நுவன் துஷார ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய முதலாவது போட்டியில் விளையாடிய கமில் மிஷார, துனித் வெல்லாலகே மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணியும் ஒரு மாற்றத்தைச் செய்து, ரசௌல்லாவுக்குப் பதிலாக சல்மான் மிர்சா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
3 போட்டிகளைக் கொண்ட இந்த இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியைச் பாகிஸ்தான் அணி வென்றது.
இதற்கமைய தொடரைக் வெல்லும் நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக, இன்று நடைபெறும் இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவது அவசியமாகியுள்ளது.