Header Logo
Vallibel FD
MOSTREAD
காணொளி
மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

சிசிடிவியில் பதிவான காட்சிகள்...

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

ஹட்டன் பேருந்து நிலையக் கடையில் திருட்டு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

    Mobitel Inner 1278

    நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரிய வழக்கில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரிய வழக்கில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


    கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான வழக்கு குறித்த தொலைக்காட்சி விவாதத்தில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


    இந்நிலையில், தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வாக்குமூலம் பதிவு செய்வதை கண்காணிக்க நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும், வீடியோ பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை எடிட் செய்யாமல் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும், வாக்குமூல பதிவை, ஐந்து நட்சத்திர விடுதி அல்லது தனியார் பங்களாக்களில் நடத்தாமல், நீதிமன்றம் அல்லது அரசு கட்டிடங்களில் நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.


    இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யவும், வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதை அரசு கட்டிடம் அல்லது நீதிமன்றத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, நட்சத்திர விடுதியில் தோனியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதில் என்ன பிரச்சினை? அதற்கான செலவுகளை அவர்கள்தானே செய்யப்போகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.


    இதையடுத்து, தோனி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தோனிக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 29 ஆம் திகதிக்கு தள்ளிவைத்தார்.