Oct 13, 2026 - 10:41 AM

ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் சாலை எண் 45 இல் உள்ள இல்லத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார். மறைந்த முதலமைச்சர் என்.டி. ராமராவ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த வீடு, அரசியல் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அடையாளமாக உள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா அலைஸ் பாலைய்யா. தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் பாலகிருஷ்ணா. 65 வயது கடந்தும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் ஆந்திராவின் இந்துபுரம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார் பாலகிருஷ்ணா. ‘மாஸ் கடவுள்’ என்று தெலுங்கு சினிமாவில் வர்ணிக்கப்படும் நடிகர் பாலகிருஷ்ணா இதுவரை 100 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த அவர் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
எல்லோருக்கும் தெரிந்தது போல் ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் மற்றும் முதல்வரான என்டிஆரின் 6 ஆவது மகன் தான் நந்தமுரி பாலகிருஷ்ணா. தந்தையை பின்பற்றி சினிமாவுக்குள் வந்தார். தனது 14 ஆவது வயதில் நடிக்கத் தொடங்கிய பாலைய்யா என்டிஆர் முதல்வரான காலகட்டத்தில் பீக்கில் இருந்தார். அன்றிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 50 வருடமாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். ஒரு ஹீரோவாக மட்டுமே நடித்து திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பாலய்யாவின் கடைசி ஐந்து படங்கள் 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியிருக்கிறது.
இந்த நிலையில் தான் பாலகிருஷ்ணா தற்போது 100 கோடி ரூபா மதிப்பிலான புதிய வீட்டில் குடியேற இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் சாலை எண் 45 இல் உள்ள இல்லத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார். மறைந்த முதலமைச்சர் என்.டி. ராமராவ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த வீடு, அரசியல் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அடையாளமாக உள்ளது.
இதற்கிடையே தான் ஹைதராபாத் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக தெலங்கானா அரசால் வீதி விரிவாக்கத் திட்டம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பாலகிருஷ்ணா இல்லத்தின் அருகேவும் சாலை பணிகள் நடக்கவிருக்கிறது. இதனையடுத்து பொது நலன் கருதி மேற்கொள்ளப்பட்டதால், பாலகிருஷ்ணா தனக்கு சொந்த 862 சதுர அடி நிலத்தை சாலை பணிகளுக்காக அரசிடம் ஒப்படைத்தார்.
அந்த இல்லத்திற்கு பதிலாக ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸ் ஒரு புதிய இல்லம் கட்டி வருகிறார் அவர். 2021 இல், பாலகிருஷ்ணாவும் அவரது மனைவி வசுந்தரா தேவியும் இந்த நிலத்தை சுமார் 15 கோடி ரூபா மதிப்பில் வாங்கினர். தற்போது இந்தச் சொத்தின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபா இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த சொத்தில் தான் தனது புதிய இல்லத்தை கட்டி வருகிறார். தியேட்டர், ஜிம் என அனைத்து வசதிகளுடன் கூடிய ஓர் இல்லமாக இது கட்டப்பட்டு வருகிறது. பாலகிருஷ்ணாவின் மனைவி வசுந்தரா தேவி மேற்பார்வையில் வீடு வடிவமைக்கப்பட்டு வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் ஒரு விஐபி ஏரியாவாக மாறி வருகிறது. தெலுங்குத் திரையுலகம் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இந்த பகுதியில் தான் வசித்து வருகின்றனர். மெகாஸ்டார் சிரஞ்சீவி உட்பட பல தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களின் இல்லங்களுக்கு மிக அருகில் தற்போது பாலகிருஷ்ணாவும் குடியேற இருக்கிறார்.






























