Oct 13, 2026 - 12:20 PM

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கடந்த ஆண்டு டெஸ்ட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார்.
தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார். இந்நிலையில், கோலி டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு குறித்து முன்னாள் துடுப்பாட்ட வீரர் வாசிம் ஜாபர் ஒரு துணிச்சலான கருத்தை முன்வைத்துள்ளார். தனது யூடியூப் சேனலில் பேசிய ஜாபர், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் மோசமாக நடத்தியதால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே கோலி ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
“அவரிடம் நடந்துகொள்ளப்பட்ட விதம் குறித்து கோலி சற்று மனக்கசப்புடன் இருந்ததாகத் தோன்றியது. கோலி போன்ற ஒரு வீரர் ரசிகர்களை மைதானத்திற்கு ஈர்க்கக்கூடியவர், அவருக்கு அத்தகைய பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவரால் நிச்சயமாக இன்னும் கூடுதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்க முடியும். கோலியின் வாயிலிருந்தே அதுபற்றி அறியும் வரை நமக்குத் தெரியாது, என தெரிவித்தார்.






























