Oct 13, 2026 - 01:35 PM

Seylan Developments PLC, 2026 ஒக்டோபர் 1 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு,
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயாவில் அமைந்துள்ள முல்/கல்யாணிபுர வித்தியாலயத்திற்கு சுமார் ரூ.2.20
மில்லியன் பெறுமதியான புதிதாக நிறுவப்பட்ட Reverse Osmosis (RO) குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பை கையளித்தது.
இப் புதிய RO அமைப்பு மூலம், வெளியில் இருந்து குடிநீரைக் கொள்வனவு செய்வதற்கான பாடசாலையின் தேவை
குறையும். இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சுற்றியுள்ள சமூகத்தினருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை சீராகவும் தொடர்ச்சியாகவும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதில் பாடசாலை எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு தீர்வாக அமைந்துள்ள இத் திட்டம், பாதுகாப்பான குடிநீரைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதற்கான உரிமையையும் சிறுவர்களின் ஆரோக்கியம் மற்றும் நலனையும் வலியுறுத்துகிறது.
பதவியாவில் அமைந்துள்ள Nayagara Water & Technology நிறுவனத்துடன் இணைந்து, Seylan Developments PLC இன் மதிப்புமிக்க பங்குதாரர்களின் அனுமதி மற்றும் தொடர்ச்சியான ஊக்குவிப்புடன் இத் திட்டம்
முன்னெடுக்கப்பட்டது. இது Seylan Developments PLC முன்னெடுத்துள்ள நான்காவது CSR திட்டமாகும்.
சமூகங்களுக்கு நடைமுறை ரீதியான, அர்த்தமுள்ள மற்றும் நீடித்த பயன்களை வழங்கும் முயற்சிகளுக்கான
நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இத்திட்டம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த Seylan Developments PLC இன் பிரதம நிறைவேற்று அதிகாரி அனுஜ
ரத்நாயக்க, “பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுக்கொள்வது அனைவருக்கும், குறிப்பாக சிறுவர்களுக்கு, அடிப்படைத் தேவையாகும். எமது நான்காவது CSR திட்டத்தின் மூலம் முல்/கல்யாணிபுர வித்தியாலயத்தின் அத்தியாவசியத் தேவையொன்றை நிவர்த்தி செய்வதுடன், சுற்றியுள்ள சமூகத்தினரும் இதன் பயன்களைப் பெறுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். நாம் சேவையாற்றும் சமூகங்களுக்கு நடைமுறை ரீதியானதும் நீடித்ததுமான பெறுமதியையும் தாக்கத்தையும் உருவாக்கும் வகையில் எமது CSR திட்டங்கள் அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும் என நாம் நம்புகிறோம்.” எனத் தெரிவித்தார்.
RO அமைப்பு நிறுவப்படுவதற்கு முன்னர், பாடசாலையானது சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள
எதவட்டுனுவெவயிலிருந்து வாராந்தம் சுமார் 500 லீற்றர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைக் கொள்வனவு செய்ய
வேண்டியிருந்தது. இதற்காக நிதி மற்றும் போக்குவரத்து சார்ந்த பல்வேறு சவால்களையும் பாடசாலை எதிர்கொண்டது. RO அமைப்பு நிறுவப்பட்டதன் மூலம் பாதுகாப்பான குடிநீரை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் நாள்பட்ட சிறுநீரக நோய் (chronic kidney disease) தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வு காணவும் இத் திட்டம் பங்களிக்கிறது.
நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அர்த்தமுள்ளதும் நிலையானதுமான CSR திட்டங்களை முன்னெடுப்பதற்கு,
தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் பங்குதாரர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. Seylan Developments PLC இன் தலைவர் ரமேஷ் ஜயசேகர தலைமையிலான பணிப்பாளர் சபையும் முகாமைத்துவமும் சமூகங்களின் அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்வதுடன், நடைமுறை ரீதியானதும் நிலையானதுமான சமூகப் பெறுமதியை உருவாக்கும் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க எதிர்பார்த்துள்ளனர்.
இக் கையளிப்பு நிகழ்வில் Seylan Developments PLC இன் பணிப்பாளர்களான திருமதி கில்லியன் எட்வர்ட்ஸ் மற்றும்
ரணில் திஸாநாயக்க ஆகியோருடன் பிரதம நிறைவேற்று அதிகாரி அனுஜ ரத்நாயக்க மற்றும் நிறுவன ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
2026 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு RO குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு கையளிக்கப்பட்டமை, Seylan
Developments PLC இன் தொடர்ச்சியான CSR திட்டத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
சிறுவர்களுக்கு ஆதரவளித்தல், சமூகங்களை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கை முழுவதும் நிலையான அபிவிருத்திக்கு பங்களித்தல் ஆகியவற்றிற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.

































