Oct 13, 2026 - 05:27 PM

கொழும்பு, கிராண்ட்பாஸ் - மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாக தீக்கிரையாக்கியுள்ளன.
இன்று (13) பிற்பகல் 2:15 அளவில் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் இருந்த சுமார் 21 தற்காலிக வீடுகள் தீ விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், தற்போது தீப்பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதற்கிடையில், தீப்பரவலால் ஏற்பட்ட சேதங்களையும் நிலவும் சூழ்நிலையையும் பார்வையிடுவதற்காக கொழும்பு மாநகரசபை முதல்வர் வ்ராய் கெலீ பல்தசார் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்தார்.
































