Oct 13, 2026 - 06:05 PM

பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 2 - 0 என தொடரை கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, இரு அணிகளுக்கும் எதிரான இருபதுக்கு 20 இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஒருநாள் சர்வதேச தொடர், எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
































