Oct 13, 2026 - 09:10 PM

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணி சார்பில் திறம்பட துடுப்பெடுத்தாடிய சாஹிப்ஸாதா பர்ஹான் (Sahibzada Farhan) அதிகபட்சமாக 76 ஓட்டங்களைக் குவித்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் தசுன் ஷானக்க 21 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மேலும், ஏஷான் மாலிங்க மற்றும் நுவான் துஷார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்படி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று போட்டியை வெல்ல இலங்கை அணிக்கு 169 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
































