Oct 13, 2026 - 10:13 PM

ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி, தொடக்கம் முதலே அதிரடியான மற்றும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதற்கமைய, 17.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 87 ஓட்டங்களை (9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசினார்.
அவருக்குப் பக்கபலமாக ஆடிய கமிந்து மெண்டிஸ் 27 பந்துகளில் 40 ஓட்டங்களையும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சினெத் ஜயவர்தன 26 பந்துகள் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
எவ்வாறாயினும், தொடரை 2 - 1 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
































