Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

    Mobitel Inner 1278

    திருநங்கைகள் குறித்த இயக்குநர் மோகன்.ஜி கருத்துக்கு ‘டோரதி’ இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

     

    இது தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட வீடியோவில்,

     

    “டோரதி படத்துக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்த மக்களுக்கு நன்றி. திரையரங்கு சென்று அங்கிருந்த ரசிகர்களை சந்தித்தேன். எல்லோரும் பாராட்டினார்கள். இதனிடையே படத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்த ஒரு குழுவினர் முயன்றனர். அதை நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. திருநங்கைகளை பற்றி பேசும் வெகுஜன படத்தை வெற்றியடைய வைக்க கூடாது என்பதில் ஒரு பிரிவினர் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஆனால், அதை தாண்டி படம் வென்றுவிட்டது. அவர்களை நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

     

    ஆனால், நேற்று (13) என் குழுவினர் ஒரு வீடியோவை என்னிடம் காட்டினார்கள். அதை பார்த்து எனக்கு கோபமும், மன வருத்தமும் ஏற்பட்டது. மோகன்.ஜி என்ற இயக்குநர், இந்தப் படம் குறித்த உரையாடலின்போது, நேஹா என்ற திருநங்கையுடன் உரையாடினார். அதில் படம் குறித்து நிறைய கருத்துகளை சொன்னார்.

     

    அது கூட பிரச்சினையில்லை. அவர், அந்த அக்காவிடம், ‘திருமணம் முடித்து என்ன செய்ய போகிறீர்கள்?’ என்று கேட்கிறார். அதற்கு அந்த திருநங்கை, ‘அன்பை பகிர்ந்துகொள்வோம்.. மகிழ்ச்சியாக துணையுடன் இருப்போம்’ என தெளிவாக விளக்கம் கொடுக்கிறார். ஆனால், மோகன்ஜி அந்த கேள்வியை விடாமல், தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்.

     

    அதன் மூலம் அவர் சொல்ல விரும்புவது, ‘உங்களால் மற்றவர்களை போல உறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது’ என்ற புள்ளிக்கு நகர்கிறார்.

     

    இது அவர்களுக்கு மிகப்பெரிய அவமானம். இந்த கேள்வியை பொது வெளியில் முன்வைக்கிறார். இதை பார்க்கும்போது எனக்கு கோபம் வருகிறது. எல்லாரையும் மனிதர்களாக பாருங்கள் என்பது தான் நம் கருத்து. பொதுவெளியில் இப்படியொரு கருத்தை அவரால் சொல்ல முடிகிறது என்றால், அது வன்முறை தான். திருநங்கை அக்காவுக்கு உளவியல் ரீதியாக தொடுக்கப்படும் வன்முறை இது. இயக்குநர் மோகன்.ஜியின் இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

     

    நீங்கள் படம் குறித்து பேசுங்கள். அதை பற்றி நான் கண்டுக்கொள்ள மாட்டேன். ஆனால், மனித நேயம் என ஒன்று இருக்கிறது. குழந்தை பெறுவது மட்டும் தான் உங்கள் வாழ்வின் லட்சியமா? நாய். பன்றி எல்லாமே குட்டி போடுகிறது.

     

    அது தான் மனிதர்களுக்கான லட்சியமா? அன்பை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என திருநங்கை கூறுகிறார். அப்படிப்பார்த்தால், ஆண் - பெண் இருவரும் திருமணம் செய்து அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால், அவர்கள் வாழ தகுதியற்றவர்களா? அவர்களால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாதா? இது திருநங்கைகள் மீதான மிகவும் கடுமையான வன்முறை.

     

    எப்படி மதம், ஜாதி ரீதியாக பேசினால், நடவடிக்கை எடுக்கப்படுமோ அப்படி பாலின ரீதியாக ஒருவரை தாழ்த்தி, அவமானப்படுத்தும் வகையில் பேசுவதற்கும் நடவடிக்கை தேவை. இப்படியான பேச்சுகளை தவிர்த்திடுங்கள். இப்படி பேசுபவர்களை அனுமதிக்காதீர்கள்.

     

    மோகன்.ஜி பேச்சுக்கு எனது வன்மையான கண்டனங்கள். எதிரில் இருப்பவர்களை மனிதராக பாருங்கள். அவர்களை எல்லோர் முன்னிலையில், காயப்படுத்த உங்களுக்கு யாரும் உரிமை கொடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.