Oct 15, 2026 - 06:18 PM

7.30 - சம்பவ இடத்திற்கு சென்று கலந்துரையாடிய ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர், தேரர்களின் கோரிக்கை தொடர்பான தீர்மானம் ஒரு மாதத்திற்குள் எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
அந்த வாக்குறுதியை நிராகரித்த, தேரர்கள் உறுதியான தீர்மானம் ஒன்று கிடைக்கும் வரையில் தாம் ஜனாதிபதி செயலக வளாகத்திலேயே தங்கியிருக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
6.45 - நடைபேரணியில் ஈடுபட்ட தேரர்களின் கோரிக்கை மனுவை ஏற்ற ஜனாதிபதி செயலாளர். அது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிப்பதாக தெரிவித்தார்.
----------------------------------------------------------------------------------------------------------------------
நடைபேரணியில் ஈடுபட்டு கொழும்பை வந்தடைந்த தேரர்களுக்கும், ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறும், தேரர்களின் மத உரிமைகளையும் வலயுறுத்தியும் தேரர்கள் நடைபேரணியை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நடைபேரணியானது இன்று மாலை ஜனாதிபதி செயலக வளாகத்தை வந்தடைந்தது.
பேரணி காரணமாக அதிகளவான பொலிஸார் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம் இந்த பேரணி காரணமாக காலி முகத்திடல் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
நடைபேரணியில் பங்கேற்றிருந்த தேரர்கள் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலாளருடன் கலந்துரையாடலை கோரி ஜனாதிபதி செயலக வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சற்றுமுன்னர் தேரர்கள் கூடியிருக்கும் பகுதிக்கு ஜனாதிபதி செயலாளர் சென்று கலந்துரையாடி வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
































