Oct 16, 2026 - 10:11 AM

கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (16) கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரஹம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் ஆஜர்படுத்துவதற்காகவே நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
































