Oct 16, 2026 - 02:15 PM

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் இன்று (16) காலை லொறியொன்றும் கெப் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் லொறியில் பயணித்த ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த லொறியும், ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனமுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
கெப் ரக வாகனம், எதிரில் வந்த காரொன்றுக்கு வழிவிட முற்பட்டபோதே, எதிர்த்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
































