Oct 16, 2026 - 04:03 PM

டிஜிட்டல் தளத்தில் தனது வலுவான ஈடுபாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ள ஹட்ச் ஸ்ரீலங்கா [HUTCH Sri Lanka], SLIM Digis 2.6 விருது விழாவில் ஐந்து விருதுகளை வென்றுள்ளது. இதன்மூலம், இவ்வாண்டின் டிஜிட்டல் சிறப்புக்கான விருது விழாவில் அதிகளவில் அங்கீகாரம் பெற்ற முன்னணி வர்த்தக நாமங்களில் ஒன்றாக ஹட்ச் திகழ்கிறது.குறிப்பாக, இவ்விருது விழாவில் அங்கீகாரம் பெற்ற ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக ஹட்ச் விளங்கியமை இந்த சாதனையை மேலும் சிறப்பிக்கிறது.
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் [Sri Lanka Institute of Marketing -SLIM) ஏற்பாடு செய்யும் SLIM Digis, நிகழ்வானது டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் சிறப்பு, புத்தாக்கம் மற்றும் குறிப்பிடத்தக்க சாதனைகளை கௌரவிக்கும் இலங்கையின் முன்னணி விருது மேடையாகத் திகழ்கிறது.ஹட்ச் பெற்றுள்ள இந்த அங்கீகாரமானது , டிஜிட்டல் மயமான, துரிதமான மற்றும் படைப்பாற்றல் மிக்க சந்தைப்படுத்தல் அணுகுமுறையில் நிறுவனத்தின் வளர்ந்து வரும் வலிமையை எடுத்துக்காட்டுகிறது. அன்றாட நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு உடனடியாகச் செயல்பட்டு, வாடிக்கையாளர்களை ஈர்த்து, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய டிஜிட்டல் பிரசாரங்களை முன்னெடுக்கும் ஹட்சின் திறனையும் இந்த விருதுகள் வெளிப்படுத்துகின்றன.
“டித்வா பேரிடர் காலத்திலும் இலங்கையின் தொடர்புகளைத் துண்டிக்காமல் பேணுதல்” [Keeping Sri Lanka Connected Through Ditwah’] என்ற ஹட்சின் டிஜிட்டல் பிரசாரத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. சுறுசுறுப்பான / விரைந்து செயல்படும் சந்தைப்படுத்தல் பிரிவில் தங்க விருதையும் ,சந்தைப்படுத்தல் பிரசாரத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்துதல். பிரிவில் வெள்ளி விருதையும் செயல்திறன் அடிப்படையிலான சந்தைப்படுத்தல் பிரிவில் வெண்கல விருதையும் ஹட்ச் பெற்றுள்ளது. 2025 நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ புயலின் போது, வாடிக்கையாளர்களை தொடர்ந்து தொடர்பில் வைத்திருப்பதுடன், அவர்களுக்கு தேவையான தகவல்களை விரைவாக வழங்குவதற்காக ஹட்ச் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாகச் செயல்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கிய ஹட்சின் அணுகுமுறை இந்த விருதுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹட்ச் ரோமிங் பிரிவும் மேலும் இரண்டு வெண்கல விருதுகளை வென்றுள்ளது.’’சந்தைப்படுத்தல் பிரசாரத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்துதல்’’ மற்றும் படைப்புத் திறனுள்ள உள்ளடக்கத்தை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கதை சொல்லல் முறையை உள்ளடக்கியதாக இந்தப் பிரசாரம் வடிவமைக்கப்பட்டது. வெவ்வேறு வாடிக்கையாளர் குழுக்களின் பயணப் பழக்கங்கள், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு தனித்துவமான உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டன. ஒரே பிரசாரத்தின் கீழ், வெவ்வேறு வாடிக்கையாளர் குழுக்களின் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான தகவல்களையும் உள்ளடக்கங்களையும் வழங்கியமை, ஹட்ச் ரோமிங் பிரசாரத்தின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.
“இந்த விருதுகள், ஹட்ச் தற்போது பின்பற்றும் சந்தைப்படுத்தல் அணுகுமுறையைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. எமது வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களை நெருக்கமாகப் புரிந்துகொண்டு, வேகம், பொருத்தம் மற்றும் படைப்பாற்றலுடன் அதற்கேற்ற வகையில் பதிலளிப்பதே எமது அணுகுமுறையாகும். SLIM Digis 2.6 விருது விழாவில் அங்கீகாரம் பெற்ற ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாகவும், ஐந்து பிரிவுகளில் விருதுகளைப் பெற்ற நிறுவனமாகவும் ஹட்ச் திகழ்வது, துரிதமான செயல்பாடும் சிந்தனையுடன் கூடிய கதை சொல்லலும் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட முடியும் என்பதற்கான சிறந்த சான்றாகும். மேலும், எமது மூலோபாயபங்குதாரர்களின் ஒத்துழைப்பு, நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகளே இந்தச் சிறந்த பிரசாரங்களை வெற்றிகரமாக உருவாக்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்தன. இந்த அங்கீகாரம் அந்தக் கூட்டு முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள ஒரு முக்கியமான பாராட்டாகும்” என ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்தி ஹஸன் தெரிவித்தார்.
































