Oct 16, 2026 - 04:09 PM

MAS Holdings நிறுவனம் தனது Eco Go Beyond நிலையான பாடசாலைகள் திட்டத்தின் 20 ஆண்டுகளைக் கொண்டாடி, 250க்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 377,000க்கும் அதிகமான மாணவர்களைச் சென்றடைந்து நிலைத்தன்மைக் கல்வியை வழங்கியுள்ளது. மேலும், இத்திட்டம் இளைஞர்கள், கல்வியாளர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை இந்த வழித்தடத்தில் வெற்றிகரமாக ஈடுபடுத்தியுள்ளது.
கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Eco Go Beyond திட்டம், மிகவும் நிலையானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதில் கல்வி ஒரு சக்திவாய்ந்த பங்கை வகிக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நிறுவப்பட்டது. MAS நிறுவனத்துடன் தொடர்புடைய சமூகங்களில் உள்ள பாடசாலைகளுடன் இணைந்து பணியாற்றும் இத்திட்டம், வெறும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அப்பால் சென்று,
மாணவர்கள் நிலைத்தன்மை சவால்களைப் புரிந்து கொள்ளவும், அவற்றில் தங்களின் பங்களிப்பை ஆராயவும், மற்றும் கற்றலை செயலாக மாற்றவும் உதவ முயன்றுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, Eco Go Beyond திட்டம் உலகளாவிய நிலைத்தன்மை நிகழ்ச்சி நிரல் மற்றும் மாணவர்கள், சமூகங்கள், நாடு மற்றும் இந்த பூமியின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. இதன் அணுகுமுறையானது, பாடசாலை அடிப்படையிலான கற்றலில் இருந்து மேம்பட்டு, சமூக மட்டத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் மாணவர் தலைமையிலான திட்டங்களாக வளர்ந்துள்ளது. அதே வேளையில், இது அடுத்த தலைமுறையினரிடையே அறிவு, நம்பிக்கை மற்றும் தனித்திறன் ஆகியவற்றை உருவாக்குகிறது.
MAS நிறுவனத்திற்கு, இந்த ஆண்டு நிகழ்வானது பெருகிய முறையில் சிக்கலாகி வரும் இவ்வுலகில், நிலைத்தன்மைக் கல்வி வகிக்கக்கூடிய பங்கை எதிர்கால நோக்குடன் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. இந்த மைல்கல் குறித்து MAS Holdings நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “மிகவும் நிலையானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கு, இன்றைய தீர்வுகளில் முதலீடு செய்வது மட்டுமல்லாமல், அடுத்த கட்டத்தை
வடிவமைக்கப் போகும் மனிதர்களிடமும் நாம் முதலீடு செய்ய வேண்டும். Eco Go Beyond நிலையான பாடசாலைகள் திட்டத்தின் மூலம், அர்த்தமுள்ள மாற்றத்தை வழிநடத்துவதற்கான அறிவு, நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வைக்கொண்ட ஓர் இளந்தலைமுறையினரை இலங்கையிலும் அதற்கு அப்பாலும் வளர்த்தெடுப்பதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்” என்று கூறினார்.
இத்திட்டத்தின் பயணத்தை திரும்பிப் பார்த்து, MAS Holdings நிறுவனத்தின் நிலைத்தன்மை வணிகப் பிரிவின் பணிப்பாளர் அமந்தி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்: “இருபது ஆண்டுகள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல், ஆனால் எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது என்னவென்றால், இதனைச் சாத்தியமாக்கியது கூட்டு அர்ப்பணிப்பு தான். முடிவெடுப்பவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூகங்கள் என அனைவரும் நிலைத்தன்மைக் கல்வி மிக
முக்கியமானது என்று தொடர்ந்து நம்பி, அந்த நோக்கத்திற்காக ஒன்றிணைந்ததாலேயே Eco Go Beyond திட்டம் இவ்வளவு காலம் நிலைத்து நிற்கிறது. இதன் தாக்கம் நாம் சென்றடைந்த இளைஞர்களின் எண்ணிக்கையில் மாத்திரமல்ல, அவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் சமூகத்திலும் முன்னோக்கி எடுத்துச் சென்ற யோசனைகள், தேர்வுகள் மற்றும் செயல்களிலும்
பிரதிபலிக்கிறது” என்று கூறினார்.
'Eco Go Beyond' திட்டத்தின் வெற்றிக்கான முக்கிய காரணம், நிலைத்தன்மைக் கல்வியானது அன்றாட வாழ்க்கையோடு இணைக்கப்படும்போதுதான் மிகவும் அர்த்தமுள்ளதாக மாறும் என்ற கருத்தாகும். மாணவர்கள் தங்களின் பாடசாலைகள் மற்றும் சமூகங்களுக்குள் இருக்கும் சவால்களைக் கண்டறிந்து, அதற்கான நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இது வகுப்பறைக்கு அப்பாலும் அவர்கள் கற்றுக்கொண்டவற்றைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், இத்திட்டத்தின் செல்வாக்கை தனிப்பட்ட மாணவர்களையும் தாண்டி
விரிவுபடுத்துகிறது. காலப்போக்கில், பங்கேற்பு மற்றும் செயல்களின் மூலம் கற்றல் என்ற இந்த முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக்கொண்டு, வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக முன்னுரிமைகளுக்கு ஏற்ப Eco Go Beyond திட்டம் தனது உள்ளடக்கத்தையும் கற்பித்தல் முறையையும் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளது.
Eco Go Beyond திட்டம் தனது மூன்றாவது தசாப்தத்தில் கால்பதிக்கும் வேளையில், வளர்ந்து வரும் நிலைத்தன்மை சவால்களுக்கு ஏற்ப இத்திட்டத்தை MAS நிறுவனம் தொடர்ந்து மேம்படுத்தும். அதே நேரத்தில், ஆரம்பம் முதலே தங்களை வழிநடத்தி வரும் அந்த அடிப்படை நம்பிக்கையையும் அது தொடர்ந்து கடைப்பிடிக்கும்: அதாவது, எதிர்காலம் என்பது இன்று எடுக்கப்படும் முடிவுகளால்
மட்டுமல்ல, அடுத்த தலைமுறையினரின் கைகளில் ஒப்படைக்கப்படும் விழுமியங்கள், அறிவு மற்றும் தனித்திறன் ஆகியவற்றின் மூலமுமே வடிவமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
MAS HOLDINGS தொடர்பாக:
MAS ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை மற்றும் ஜவுளி உற்பத்தித்துறையின் வடிவமைப்பு முதல் விநியோகம் வரையிலான தீர்வுகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். 100,000 ஊழியர்களைக் கொண்ட உலகளாவிய சமூகத்துடன், MAS 13 நாடுகளில் பரவியுள்ளது. உள்ளாடைகள், விளையாட்டு உடைகள், செயல்பாட்டு உடைகள், செயல்
திறனுக்கான உடைகள், மற்றும் நீச்சலுடைகள் ஆகியவற்றுடன், இப்போது அணியக்கூடிய தொழில்நுட்பம், ஃபெம்டெக், ஏற்றி இறக்கல்கள் மற்றும் ஜவுளி பூங்காக்கள் என உலகளவில் தனது வரம்பை விரிவுபடுத்துகிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, MAS அதன் நெறிமுறை மற்றும் நீடித்த நிலையான பணிச் சூழலுக்காகவும், அதன் கைவினைத்திறன் மற்றும் தயாரிப்புத் திறனுக்காகவும் உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், நீடித்த நிலையான மாற்றத்தை உருவாக்குவதற்குமான முயற்சிகள், தயாரிப்புகள், வாழ்க்கை மற்றும் கிரகத்தை மாற்றியமைக்கும் ஒரு அர்ப்பணிப்பான MAS மாற்றத்திற்கான திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
































