Oct 18, 2026 - 10:22 AM

ஹப்புத்தளை நகரில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ரயில் பாதைக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தினால் குறித்த இரு வீடுகளுக்கும் பகுதி அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக இதில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பகுதியில் நீடிக்கும் கடும் மழை காரணமாகப் பிரதான வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், ஹப்புத்தளை - வியாரகல பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது கற்கள் உருண்டு விழுந்ததில் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளது.
































