Oct 18, 2026 - 03:47 PM

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில், 'அக்போ' யானையைத் தேடும் பணியில் ஈடுபடுவதற்காக விசேட இராணுவக் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகப் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்போ யானையைக் கண்டுபிடிக்கும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், சுற்றாடல் அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அக்போ யானையைக் கண்டுபிடிப்பதற்காகச் விசேட இராணுவக் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவின் மூலம் அக்போ யானை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
































