Oct 18, 2026 - 04:28 PM

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப் துடுப்பாட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.
பெங்களூருவில் நடைபெற்றிருக்க வேண்டிய கடைசி ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், மேற்கிந்திய தீவுகள் தலைவர் ஷாய் ஹோப் துடுப்பாட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்தத் தொடரில் அபாரமாக விளையாடி 4 இன்னிங்ஸ்களில் 261 ஓட்டங்கள் குவித்து அதிக ஓட்டங்களை எடுத்த வீரராகத் திகழ்ந்த ஷாய் ஹோப், தொடர் நாயகன் விருதை வென்றார்.
ராஞ்சியில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியிலும், ஐதராபாத்தில் நடைபெற்ற 4-வது போட்டியிலும் அவர் சதமடித்து அசத்தினார்.
குறிப்பாக, 4-வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்கள் எடுத்த அவரது ஆட்டம் மேற்கிந்திய தீவுகள் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப் துடுப்பாட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்திய அணியின் தலைவராக இருந்த சூர்யகுமார் யாதவ், 2025-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 242 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
தற்போது 261 ஓட்டங்கள் குவித்துள்ள ஷாய் ஹோப், இருதரப்பு டி20 சர்வதேசத் தொடர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த தலைவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவை பின்தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் முன்னாள் தலைவர் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.
2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் 7 இன்னிங்ஸ்களில் 285 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக உள்ளது.
ஷாய் ஹோப் 261 ஓட்டங்கள் எடுத்த நிலையில், பாபர் அசாமின் சாதனையை முறியடிக்க இன்னும் 24 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டன.
ஆனால், கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன் மூலம் இருதரப்பு டி20 சர்வதேசத் தொடர்களில் அதிக ஓட்டங்களை எடுத்த தலைவர்கள் பட்டியலில் ஷாய் ஹோப் 261 ஓட்டங்களுடன் 2-வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 242 ஓட்டங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
































