Oct 19, 2026 - 12:56 PM

First Capital Startup Nation by Hatch Demo Day 2026 நிகழ்வில் வளர்ந்து வரும் பத்து ஆரம்பநிலை
(ஸ்டார்ட்அப் - Startup) நிறுவனங்கள் முக்கிய இடத்தைப். புத்தாக்கமான வணிகங்களை
உருவாக்குவது முதல், மூலதனம், தொழில்துறை சார்ந்த தொடர்புகள் மற்றும் சர்வதேச
வாய்ப்புகளைப் பெறுவது வரையிலான அவர்களின் பயணத்தில்,ஒரு முக்கிய மைல்க்கல்லாக
அமைந்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 01 ஆம் திகதி Trace Expert City இல் நடைபெற்ற, Demo Day நடுவர்கள்,
முதலீட்டாளர்கள், பெருநிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் இலங்கையின் பரந்த
ஆரம்பநிலை வணிகங்களின் கட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் முன்னிலையில் 2026
திட்டத்தில் பங்கேற்ற நிறுவுனர்களை ஒன்றிணைத்தது. First Capital Startup Nation by Hatch
ஆனது, ஜனசக்தி குழுமத்தின் (JXG) துணை நிறுவனமான First Capital Holdings PLC இன் ஒரு
திட்டமாகும். இது First Capital இன் மூலதனச் சந்தை நிபுணத்துவத்தை Hatch இன் வணிக
தொடக்க சூழல் கட்டமைப்புடன் இணைத்து, வளர்ந்து வரும் வணிகங்களுக்கு சிறந்த பாதைகளை
உருவாக்குகிறது.
தற்போது இலங்கை, நேபாளம், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நான்கு நாடுகளில் Startup Nation
செயற்படுத்தப்படுவதோடு, இந்நிகழ்ச்சியானது தனது பிராந்திய தடத்தையும்
விரிவுபடுத்தியுள்ளது. இந்தப் பிராந்திய விரிவாக்கமானது தெற்காசியாவில் உள்ள
வளர்ச்சியடைந்து வரும் வணிகங்களை ஒன்றிணைத்து, நிறுவுனர்கள் தங்கள் சொந்த
சந்தைகளுக்கு அப்பாற்பட்ட வாய்ப்புகள், வலையமைப்புகள் மற்றும் வெளிப்பாடுகளைப்
பெறுவதற்கான ஒரு பரந்த தளத்தை உருவாக்குகிறது. இவ்வாறான பின்னணியில், இலங்கையின்
Demo Day வளர்ச்சியடைந்து வரும் ஆரம்பநிலை வணிக நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும்
மேம்பாட்டை ஆதரிக்கும் ஒரு பரந்த பிராந்திய தளத்தின் ஒரு அங்கமாக அமைகிறது.
இந்த Demo Dayல், பங்கேற்கும் ஆரம்பநிலை வணிக நிறுவனங்களை வளர்ச்சிக்கட்டத்திற்கு
அப்பால் நகர்த்தி, அதன் நிறுவுனர்கள் தமது வணிகங்களை வெளிப்படுத்தவும், அவர்கள் தீர்க்கும்
பிரச்சனைகளை வெளிப்படுத்தவும், அவர்கள் பின்தொடரும் சந்தை வாய்ப்புகளைத்
தெளிவுபடுத்தவும் ஒரு தளத்தை வழங்கியது. இது அவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குப்
பங்களிக்கக்கூடிய முதலீட்டாளர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் அதன் சூழல் கட்டமைப்பிலுள்ள
பங்குதாரர்களுடன் நேரடியான உரையாடல்களுக்கும் வழிவகுத்தது. இந்நிகழ்வின் ஒரு முக்கிய
பெறுபேறாக, முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்ட ஆரம்பநிலை வணிக
நிறுவனங்கள்,தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுடன் பங்கு முதலீட்டுச் சுற்றுக்கு (equity
funding round) முன்னேறியுள்ளன. இது அவர்களுக்கு மிகவும் கவனம் செலுத்தப்பட்ட சூழலில்
தங்கள் வணிகங்களை முன்வைப்பதற்கும் சாத்தியமான முதலீடுகள் குறித்து நேரடியாக
ஈடுபடுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
பிராந்திய அளவில் வளர்வதற்குத் தயாராக உள்ள ஆரம்ப நிலை மற்றும் வளர்ச்சி நிலையிலுள்ள
இலங்கையின் ஆரம்ப நிலை வணிக நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்காக, First Capital Holdings
PLC இன் ரூபா 300 மில்லியனை முதன்மை ஆதாரமாக உள்ளடக்கிய ரூபா 3 பில்லியன் கூட்டு
நிதியான HLAB எனும் புதிய முயற்சியையும் Hatch அறிவித்துள்ளது. இது Lankan Angel Network
மற்றும் BOV Capital ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து, First Capital Holdings PLC முகாமைத்துவ பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று
அதிகாரியுமான டில்ஷான் வீரசேகர தெரிவிக்கையில், இலங்கையின் தொழில்முனைவோர்
வளர்ச்சியின் அடுத்த கட்டமானது நாம் உருவாக்கும் யோசனைகளை மட்டும் சார்ந்ததல்ல;
மாறாக அந்த யோசனைகளை மூலதனம், நிபுணத்துவம் மற்றும் சந்தைகளுடன் இணைக்கும்
எமது திறனைப் பொறுத்ததாகும். First Capital Startup Nation by Hatch மூலம், நம்பிக்கைக்குரிய
வணிகங்களை அவை அளவிடப்படுவதற்கு தேவையான வளங்கள் மற்றும்
வலையமைப்புகளுடன் நெருக்கமாகக் கொண்டுவரும் ஒரு பாதையை நாம் உருவாக்குகிறோம்.
ஜனசக்தி (JXG) நிறுவனத்தின் துணை நிறுவனம் எனும் வகையில், இந்தத் தளத்திற்கு வலுவான
மூலதனச் சந்தை புரிதலை First Capital கொண்டுவருகிறது. இலங்கையில் கட்டமைக்கப்படும்
அடுத்த தலைமுறை வணிகங்களை ஆதரிக்க அந்த நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதில் நாம்
உண்மையான மதிப்பைக் காண்கிறோம். என்றார்.
இந்நிகழ்வில், ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதம ஆலோசகர் கலாநிதி
ஹன்ஸ் விஜயசூரிய தெரிவிக்கையில், இலங்கை டிஜிட்டல் துறையில் உலகளாவிய
முதலீட்டிற்கு ஒரு அழுத்தமான வாய்ப்பை வழங்குகிறது. இது உயர்ந்த திறமை மற்றும் உலகத்
தரம் வாய்ந்த நம்பிக்கை கட்டமைப்பு ஆகிய இரண்டு முக்கிய தூண்களை அடிப்படையாகக்
கொண்டதாகும். 2030ஆம் ஆண்டிற்குள் 15 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதாரத்தை
நோக்கி இலங்கை முன்னேறி வருவதால், இது முதலீட்டாளர்களும் புத்தாக்க
கண்டுபிடிப்பாளர்களும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் சுமார் 25 பில்லியன் டொலர் கூட்டு
மதிப்பு உருவாக்கத்தை ஏற்படுத்துகிறது. இலங்கை தனது தொழில்முனைவோர் மற்றும்
போட்டித்தன்மையை எளிதாக்கும் அம்சங்களைத் தொடர்ச்சியாக மேம்படுத்தும் நிலையில்,
விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள மூலதன நகர்வு (Capital Mobility) வசதியானது,
இலங்கையின் ஆரம்பநிலை வணிக நிறுவனங்கள் தமது தளத்தை நாட்டிற்குள்ளேயே தக்க
வைத்துக் கொண்டு பிராந்திய ரீதியில் விரிவுபடுத்த உதவும். அத்துடன், டிஜிட்டல்
வணிகங்களுக்கான மெய்நிகர் விசேட பொருளாதார வலயம் (Virtual Special Economic Zone),
மெய்நிகர் சொத்து சேவை வழங்குநர்களுக்கான (Virtual Asset Service Providers)
ஒழுங்குமுறைப்படுத்தல் ஆகியன விரைவில் வெளியிடப்படவுள்ளன. என்றார்.
இந்த நிகழ்ச்சியானது ஒரு சர்வதேச தளத்திற்கான பாதையையும் உருவாக்குகிறது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பெகாசஸ் வென்ச்சர்ஸ் (Pegasus Ventures)
நிறுவனத்துடனான கூட்டாண்மையைத் தொடர்ந்து, First Capital Startup Nation by Hatch 2026
இன் முதலிடத்தைப் பிடித்த ஆரம்ப நிலை வணிகமானது, உலகளாவிய போட்டியான Startup
World Cup இல் போட்டியிட நவம்பர் மாதம் சென் பிரான்சிஸ்கோ நகரிற்குப் பயணம்
செய்யவுள்ளது. First Capital Startup Nation by Hatch ஆனது, இந்நிகழ்வின் உத்தியோகபூர்வ
பிராந்திய பங்காளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தெரிவு செய்யப்படும் ஆரம்பநிலை வணிக நிறுவனத்திற்கு தமது வணிகத்தை ஒரு சர்வதேச
தளத்திற்கு எடுத்துச் செல்லவும், தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களின் பரந்த சூழல்
கட்டமைப்புடன் இணைக்கவும், First Capital Startup Nation by Hatch மூலம் உலக அரங்கில்
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குமான ஒரு வாய்ப்பாக இது அமைகிறது.
இது குறித்து Hatch இணை நிறுவுனர் ஜீவன் ஞானம் தெரிவிக்கையில், Demo Day என்பது
நிறுவுனர்கள் ஒரு நிகழ்ச்சிக்குள்ளிருந்து தங்களை கட்டமைப்பதில் இருந்து தமது வணிகங்களை
பரந்த சூழல் கட்டமைப்பிற்குள் கொண்டு செல்லும் இடமாகும். இந்த நிலையானது, இங்கு
ஏற்படுத்தப்படும் அணுகல் மூலமே மிகவும் அர்த்தமுள்ளதாக மாறுகின்றது. முதலீட்டாளர்கள்,
பெருநிறுவனங்ள், விமர்சனங்கள் மற்றும் வணிகங்களை முன்னோக்கி கொண்டு செல்ல
உதவக்கூடிய வாய்ப்புகளுக்கான அணுகல் இதன் மூலம் கிடைக்கிறது. பங்கு முதலீட்டுச் சுற்று
மற்றும் சர்வதேச ரீதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புடன், நிறுவுனர்கள் தாம் கட்டமைத்த
விடயங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தற்போது உறுதியான பாதைகளைக்
கொண்டுள்ளனர். என்றார்.
பங்கேற்ற பத்து ஆரம்பநிலை வணிக நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து வரும் பல்வேறு வணிக
எண்ணக்கருக்கள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை முன்வைத்தன. இது
முதலீட்டாளர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கு அடுத்த தலைமுறை
இலங்கை நிறுவுனர்களால் உருவாக்கப்படும் யோசனைகள் மற்றும் வணிகங்கள் பற்றிய ஒரு
பார்வையை வழங்கியது. மூன்று ஆரம்ப நிலை வணிக நிறுவனங்கள் பங்கு முதலீட்டு
வாய்ப்பிற்கு முன்னேறியுள்ளதோடு, நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த வெற்றியாளர் சர்வதேச ரீதியில்
போட்டியிடத் தயாராக உள்ளார். அந்த வகையில், First Capital Startup Nation by Hatch 2026
நிகழ்வானது தொழில்முனைவை மூலதனம், சந்தைக்கான அணுகல் மற்றும் உலகளாவிய
வெளிப்பாடு ஆகியவற்றுடன் இணைக்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட பாதையை உருவாக்குகிறது.
பங்கேற்ற ஆரம்பநிலை வணிகங்களின் நிறுவுனர்களைப் பொறுத்தவரை, Demo Day தமது
வணிகங்களை உருவாக்குவதில் இருந்து, வாக்குறுதியளிக்கும் யோசனைகளை, அளவிடக்கூடிய
வணிகங்களாக மாற்ற உதவக்கூடிய மூலதனம், தொடர்புகள் மற்றும் வாய்ப்புகளைத்
பின்தொடர்வதற்கான ஒரு மாற்றப் புள்ளியைக் குறிக்கிறது.

































