Oct 19, 2026 - 01:26 PM

வீட்டிலேயே பேக்கிங் செய்யும் சமூகத்தினர் இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில்,
அவர்களுக்குக் கற்றுக்கொள்ளவும், தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், மற்றும்
வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும் அவர்களை ஆதரிப்பதற்காக, Serendib Flour
Master’s Club எனும் பிரத்தியேக தளத்தை செரண்டிப் மா ஆலை நிறுவனம் (Serendib Flour Mills
(Pvt) Ltd) அறிமுகப்படுத்தியுள்ளது.
பேக்கிங் மீதான தங்கள் ஆர்வத்தை அர்த்தமுள்ள தொழில் வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ளும்
தனிநபர்களை வலுவூட்டுவதற்கான செரண்டிப் மா ஆலையின் தொடர்ச்சியான முயற்சிகளில்
ஒரு முக்கிய மைல்கல்லாக, இச்சங்கம் செப்டெம்பர் 17, 2026 அன்று கொழும்பு ஷெரட்டன்
ஹோட்டலில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த அறிமுக நிகழ்வில், வீட்டிலேயே பேக்கிங் செய்யும் ஆர்வலர்கள், துறைசார் நிபுணர்கள்
மற்றும் சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்தனர். இதில் Colombo Academy of
Hospitality Management-ஐச் சேர்ந்த திரு. ரவீந்திர ரஞ்சித் மற்றும் சமையல் நிபுணர் ஷிரோமா
பெரேரா, சமையல் நிபுணர் துஷாந்தி மதநாயக்க, உடற்பயிற்சி மருத்துவர் நிலக் ஷி
காசிலிங்கம் மற்றும் Institute of Business Advancement-ஐச் சேர்ந்த கௌஷல்யா கருணாரத்ன
ஆகியோர் அடங்கியிருந்தனர்.
ஆதரவான மற்றும் அறிவு சார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்கும் தூரநோக்குடனான
இலக்குடன் நிறுவப்பட்ட Serendib Flour Master’s Club, வீட்டில் பேக்கிங்கில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு
நடைமுறைத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், வணிக நுண்ணறிவைப் பெறவும்,
ஆர்வமுள்ள பொழுதுபோக்காளர்களிலிருந்து திறமையான பேக்கிங் தொழில்முனைவோராக
முன்னேறத் தேவையான நம்பிக்கையை உருவாக்கவும் உதவுவதை நோக்கமாகக்
கொண்டுள்ளது.
இதன் தொடக்க விழாவில் பேசிய செரண்டிப் மா ஆலையின் பிரதம நிறைவேற்று அதிகாரி
அமிதவ் பெசக், “இலங்கையின் பேக்கிங் சமூகத்திற்குப் பின்னால் உள்ள மக்களுக்கு
ஆதரவளிப்பதில் எங்களின் அர்ப்பணிப்பை Serendib Flour Master’s Club பிரதிபலிக்கிறது.
தொழில்முனைவு, வருமானம் ஈட்டுதல் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் வீட்டில்
பேக்கிங்கில் ஈடுபடுபவர்களின் முக்கிய பங்கு பெருகி வருகின்றது. இந்தத் தளத்தின் மூலம்,
அவர்கள் வளர்ச்சி அடையத் தேவையான அறிவு, வழிகாட்டுதல் மற்றும் சமூக ஆதரவை
வழங்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
இந்தக் கிளப்பின் மூலம், உறுப்பினர்கள் அறிவுப் பகிர்வு அமர்வுகள், நடைமுறைப் பயிற்சிச்
செயலமர்வுகள், நிபுணர்களால் வழிநடத்தப்படும் கற்றல் அனுபவங்கள் மற்றும் சமூக
நடவடிக்கைகளில் பங்கேற்கும் அமர்வுகள் போன்ற வாய்ப்புக்களைக் கொண்டுள்ளனர். இந்த
அமர்வுகள், தயாரிப்பு மேம்பாடு, வணிக முகாமைத்துவம், சந்தைப்படுத்தல், பொதியிடல்,
உணவுத் தரநிலைகள், சான்று அங்கீகாரங்கள் மற்றும் வெற்றிகரமான வீட்டு
அடிப்படையிலான பேக்கிங் தொழிலை உருவாக்குவதற்கான பிற அத்தியாவசிய அம்சங்கள்
உட்பட, பேக்கிங் மற்றும் வணிகம் தொடர்பான பகுதிகளை உள்ளடக்கும்.
இந்த முன்னெடுப்பானது, இலங்கையில் பரந்த பேக்கிங் சூழலமைப்பின் வளர்ச்சிக்குத்
தீவிரமாகப் பங்களிப்பதன் மூலம், வெறும் மா வழங்குநராக மட்டும் இல்லாமல், அதற்கும்
மேலாகச் செயல்படுவதில் செரண்டிப் மா ஆலையின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
வீட்டிலேயே பேக்கிங் செய்வது, தொழில்முனைவு மற்றும் வருமானம் ஈட்டுவதற்கான புதிய
பாதைகளைத் தொடர்ந்து திறந்து வருவதால், Serendib Flour Master’s Club போன்ற தளங்கள்,
ஆர்வத்தை அறிவு மற்றும் வாய்ப்புகளுடன் இணைப்பதில் ஒரு முக்கியமான பங்கை
ஆற்றுகிறது.
இந்தத் தொடக்க விழா, பல்வேறு பின்னணிகள் மற்றும் தொழில்முனைவுப் பயணத்தின்
வெவ்வேறு கட்டங்களில் உள்ள வீடுகளில் பேக்கிங்கில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள்
அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளவும், நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும்,
சமூகத்திற்குள் வலுவான தொடர்புகளை உருவாக்கவும் ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது.
Serendib Flour Master’s Club இன் தொடக்கத்துடன், இலங்கையின் வீடுகளில் பேக்கிங்கில்
ஈடுபட்டுள்ள சமூகத்தின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் ஒரு நீண்டகாலத் தளத்தை
உருவாக்குவதை செரண்டிப் மா ஆலை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
திறமைகளை வளர்ப்பது, தொழில்முனைவோரை ஊக்குவிப்பது மற்றும் வீடுகளில் பேக்கிங்கில்
ஈடுபட்டுள்ளவர்களைத் தங்கள் ஆர்வத்தைத் தொழிலாக மாற்ற வலுவூட்டுவது ஆகியவற்றை
நோக்கமாகக் கொண்ட செரண்டிப் மா ஆலையின் பயணத்தில், ஆர்வத்திலிருந்து
தொழில்முறை வரை இந்த கிளப் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. அதே நேரத்தில்,
“தேசத்திற்கு ஊட்டமளித்தல் என்ற அதன் நோக்கத்தையும் இது தொடர்கிறது.
































