Oct 19, 2026 - 02:15 PM

செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் முன்னணி புலமைப்பரிசில் திட்டமான பிரணாம திட்டத்தின் 25ஆவது பதிப்பை
முன்னிட்டு, கல்வியில் சிறந்து விளங்கும் மற்றும் கல்விசாரா செயற்பாடுகளில் விசேட சாதனைகளைப் படைத்த
காப்புறுதிதாரர்களின் பிள்ளைகள் 147 பேருக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 23.4 மில்லியன் ரூபா (2.34 கோடி ரூபா) நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்தின் ஊடாக இலங்கை இளம் தலைமுறையினருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்த நிதியுதவி 263.4 மில்லியன் ரூபாவாக (26.34 கோடி ரூபா) அதிகரித்துள்ளது.
2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் ஊடாக இதுவரை வழங்கப்பட்ட புலமைப்பரிசில்களின் மொத்த
எண்ணிக்கை 3,613 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக மாணவர்களின் கல்விச் சாதனைகளை
ஊக்குவிப்பதிலும், நாடளாவிய ரீதியில் இளம் திறமையாளர்களின் ஆற்றல்களை அடையாளம் கண்டு வளர்ப்பதிலும் செலிங்கோ லைஃப் நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பையும் முதலீட்டையும் இது எடுத்துக்காட்டுகிறது.
இந்த மைல்கல் நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரசாத் சேதுங்க, செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரங்க அபேநாயக்க மற்றும் முன்னாள் பிரணாம புலமைப்பரிசில் மாணவியான டாக்டர் எஸ்.கே.ஏ.பி. தில்ஹார ஆகியோர் உரையாற்றினர். இளம் வயதில் ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமானதொரு கட்டத்தில் கிடைக்கும் கல்வி வாய்ப்புகளும் ஆதரவும் எத்தகைய முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதை டாக்டர் தில்ஹாரவின் வாழ்க்கைப் பயணம் எடுத்துக்காட்டுகிறது.
நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்திய பேராசிரியர் சேதுங்க, 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறக்கூடிய வகையில் சிறுவர்களைத் தயார்ப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எதிர்காலம் மிகவும் கணிக்க முடியாத தன்மையைக் கொண்டுள்ள நிலையில், வேகமாக மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு சிறுவர்களுக்கு எவ்வாறு கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதைத் துல்லியமாகத் தீர்மானிப்பது சவாலானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும், இளம் தலைமுறையினர் வளர்த்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசியத் திறன்களாக விமர்சனச் சிந்தனை, புத்தாக்கம், கூட்டுச் செயற்பாடு மற்றும் தொடர்பாடல் ஆகியவற்றை அவர் அடையாளப்படுத்தினார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுத்து வெற்றிபெறுவதற்கு இத்திறன்கள் இன்றியமையாதவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
கல்வியின் ஊடாக வளர்த்துக்கொள்வதற்கு மிகவும் சவாலான திறன்களாகவும் இவை காணப்படுகின்றன எனப்
பேராசிரியர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மிகுந்த புத்திசாலித்தனம் கொண்டவர்கள்கூட மற்றவர்களுடன் இணைந்து செயற்படுவதிலும், கருத்துகளைச் சிறந்த முறையில் பரிமாறிக்கொள்வதிலும் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என அவர் எச்சரித்தார். எனவே, பெற்றோர் தமது பிள்ளைகள் மீது விதிக்கும் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களுக்கு வழங்கும் அழுத்தங்கள் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 21ஆம் நூற்றாண்டின் சவால்களைச் சிந்தனைத் தெளிவுடனும் புத்திசாலித்தனத்துடனும் அணுகுபவர்களே வெற்றிபெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரவேற்புரையாற்றிய செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதிப் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரங்க அபேநாயக்க, தொழில்நுட்பம் ஏற்படுத்திவரும் மாற்றங்களையும் செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். இலங்கையும் இத்தொழில்நுட்பத்தைத் திறம்படக் கற்றுத் தேர்ந்து, புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் அரச சேவை உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் நிலவும் வினைத்திறன்
குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு இலங்கைக்கு சிறந்ததொரு வாய்ப்பை வழங்குவதாக ரங்க அபேநாயக்க சுட்டிக்காட்டினார். தத்தமது துறைகளில் சிறந்து விளங்க விரும்புவோர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் நம்பிக்கையுடன் ஈடுபடுவதற்குத் தேவையான அறிவையும்
திறன்களையும் சிறுவர்கள் வளர்த்துக்கொள்ளும் வகையில் கல்வி முறைமை மேம்படுத்தப்பட வேண்டியதன்
அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதநேயம், விழுமியங்கள் மற்றும் பாரம்பரியங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார். புதிய தொழில்நுட்பத் திறன்களைச் சமூகம் ஏற்றுக்கொண்டு முன்னேறினாலும், மனிதநேயத்தையும் அடிப்படை விழுமியங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2026ஆம் ஆண்டுக்கான பிரணாம புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர
புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 27 மாணவர்களும், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற 25 மாணவர்களும், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்து விளங்கிய 91 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் பெற்றுக்கொண்ட சாதனைகளைப் பாராட்டும் வகையில், தகைமை
அடிப்படையிலான பிரிவின் கீழ் மேலும் நான்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன. 2026 ஆம் ஆண்டுக்கான Brand Finance இன் நாட்டின் 100 மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளின் தரவரிசையில் இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க காப்பீட்டு பிராண்டாகத் தரவரிசைப்படுத்தப்பட்ட செலின்கோ லைஃப், 2026 SLIM காந்தார் மக்களின் விருதுகள் (2026 SLIM Kantar People’s Awards) விருது வழங்கும் விழாவில், தொடர்ந்து 20-வது ஆண்டாக ஆண்டின் மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் என்ற விருதை முன்னெப்போதும் இல்லாத வகையில் வென்றுள்ள செலிங்கோ லைஃப், World Finance நிறுவனத்தால் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தக நாமமாகவும் செலிங்கோ லைஃப் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. காப்புறுதிதாரர்களின் இலட்சியங்களைப் பாதுகாத்து, அவற்றுடன் தொடர்புடைய இடர்களைக் குறைக்கும் வகையில், நிறுவனம் புதுமையான காப்புறுதித் தீர்வுகளை வழங்கி வருகிறது.
































