Oct 19, 2026 - 02:22 PM

Hayleys குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமும் இலங்கையில் அலுமினிய உற்பத்திகளை மேற்கொள்ளும் முன்னணி நிறுவனமுமான Alumex PLC நிறுவனம், கடந்த செப்டெம்பர் 30 இடம்பெற்ற 'National AI Awards 2026’ (தேசிய செயற்கை நுண்ணறிவு விருதுகள் 2026) நிகழ்வில் 'Best AI Solution in Manufacturing & Industry 5.0’ (உற்பத்தி மற்றும் தொழிற்துறை 5.0 இல் சிறந்த AI தீர்வு) பிரிவின் கீழ் வெண்கல விருதை வென்றுள்ளது. இந்த விருதானது டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆதரவின் கீழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அலுமினிய உற்பத்திகளின் வடிவமைப்பு கண்காணிப்பு தொகுதி (Extruder Production Monitoring System) மற்றும் ஸ்மார்ட் நிகழ்நேர வலுசக்தி கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (Smart Real-Time Energy Monitoring & Analytics System) எனும் புத்தாக்க கண்டுபிடிப்பிற்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது வடிவமைப்பு கட்டமைப்பின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான AI இனால் செயற்படுத்தப்படும் 'Golden Batch’ அம்சத்தைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளில் உள்ள செயன்முறையின் சீரான தன்மை மற்றும் வலுசக்தி முகாமைத்துவத்துடன் உற்பத்திக் கண்காணிப்பை முன்னெடுப்பதற்காக AI மற்றும் தரவு பகுப்பாய்வுகளை நிறுவனம் பயன்படுத்தியதை இந்த விருது அங்கீகரித்து கௌரவித்துள்ளது. அது மாத்திரமன்றி, இந்தத் தீர்வானது வடிவமைப்பு செயற்பாடுகள் மற்றும் உற்பத்திச் செயற்பாடுகள் குறித்த நிகழ்நேரப் பார்வையை வழங்குவதுடன், அதன் AI மூலம் இயக்கப்படும் 'கோல்டன் பேட்ச்' மூலம் செயன்முறை மாற்றங்களை அடையாளம் காணவும், பேட்ச் சீரான தன்மையை மேம்படுத்தவும், வேகமான மற்றும் தரவு சார்ந்த முடிவுகளுக்கு ஆதரவளிக்கவும் உற்பத்தித் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. ஸ்மார்ட் நிகழ்நேர வலுசக்தி கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு அமைப்பானது உற்பத்திச் செயன்முறை முழுவதும் வலுசக்தி நுகர்வைக் கண்காணிக்கிறது. இது வலுசக்தி பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் செயற்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்குமான வாய்ப்புகளை அடையாளம் காண உதவுகிறது.
இந்த வெண்கல விருதானது நிறுவனத்தின் ஸ்மார்ட் உற்பத்தித் துறையிலான தொடர்ச்சியான முன்னேற்றத்தில் ஒரு முக்கிய அடியெடுத்து வைப்பை குறிப்பதுடன், டிஜிட்டல் திறன்களைத் தனது செயற்பாடுகளில் ஒருங்கிணைத்தல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட, அதன் மூலம் பதிலளிக்கக்கூடிய மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உற்பத்திச் செயன்முறைகளைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் நிறுவனம் கொண்டுள்ள கவனத்தைப் இது பிரதிபலிக்கிறது. Alumex PLC தனது செயற்பாடுகள் முழுவதும் தொழில்நுட்பத்தின் புத்தாக்கமான பயன்பாடுகளை ஆராய்வதில் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் உள்ளது.
































