Nov 26, 2026 - 08:02 PM

இலங்கை முகாமைத்துவ சேவைச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி சுகயீன விடுமுறையைப் பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் ஊடாக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இந்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காததன் காரணமாகவே அச்சங்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

































