Oct 19, 2026 - 02:17 PM

14ஆவது நிறுவனங்களுக்கு இடையிலான இரட்டையர் குழு பெட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில், MAS
ஹோல்டிங்ஸ் நிறுவனம் மீண்டும் ஒருமுறை கணிசமான சாதனைகளைப் பதிவு செய்து தனது ஆதிக்கத்தை
நிலைநிறுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ள முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த முன்னணி பெட்மிண்டன் வீரர்கள் இப்போட்டித்
தொடரானது கொழும்பு மெர்கன்டைல் பெட்மிண்டன் சங்க விளையாட்டு அரங்கில் அண்மையில்
வெற்றிகரமாக நடைபெற்றது.
இப்போட்டியின் 240+ (கூட்டு வயதுப் பிரிவு) பிரிவில் MAS அணி தனது அபார திறமையை வெளிப்படுத்தி
இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியது. அதேவேளை, பிளேட் பிரிவிலும் கடுமையாகப் போராடி அந்த அணி
இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
இப்போட்டித் தொடரின் 240+ பிரிவில் இரண்டாவது இடம்பிடித்த MAS அணியில் ரன்திக பெர்னாண்டோ,
தேவின் ஜயசேகர, நவோத் ஜயசுந்தர, ரங்க ரந்துனு, வசந்த சுவர்ணதிலக்க, சாமர பியதிஸ்ஸ, சிரந்த
குலரத்ன மற்றும் மோகன் குமார ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
அத்துடன், பிளேட் பிரிவில் இரண்டாவாது இடம்பிடித்த அணியில் ரன்திக பெர்னாண்டோ, தேவின்
ஜயசேகர, தரணி சிரிவர்தன, நவோத் ஜயசுந்தர, ரங்க ரந்துனு, சாமர பியதிஸ்ஸ, வசந்த சுவர்ணதிலக்க,
ஜனுலி ஜயசேகர மற்றும் புலிந்து தொடகந்த ஆராச்சி ஆகியோர் போட்டியிட்டனர்.
மேலும், MAS நிறுவனத்தின் நொவிசஸ் அணியில் துமிந்து குணசிங்க, சரக்க குணவர்தன, சுபிபி
விஜேவர்தன, டெனிஸ் காஞ்சன, மோகன் குமார, தினுக மதுரவால, பாலித லியனகே, பிரமோத் சந்திரநாயக
மற்றும் நெமித பத்திரண ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அனுபவம், ஆற்றல் மற்றும் இளம் திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு பிரிவுகளில் முக்கிய
கௌரவங்களை வென்றதன் மூலம், விளையாட்டு மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வு மீதான தனது
அர்ப்பணிப்பை MAS Holdings நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக வர்த்தக சேவை பெட்மிண்டன் போட்டிகளில் முக்கிய பங்கு வகித்து வரும் MAS
நிறுவனம், பல்வேறு போட்டிப் பிரிவுகளிலும் திறமைமிக்க வீரர்களைக் கொண்ட பலமான அணிகளைத்
தொடர்ந்து களம் இறக்கி வருகிறது. வெற்றிப் பதக்கங்களுக்கு அப்பால், இந்தச் சாதனை MAS நிறுவனத்தின்
கூட்டுப் பணி, சவால்களை எதிர்கொள்ளும் திறன் மற்றும் களத்திலும் களத்திற்கு அப்பாலும் தனது
ஊழியர்களை வலுப்படுத்தும் உயரிய நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
































