Oct 19, 2026 - 03:21 PM

அரசாங்கத்தினால் பாராளுமன்றி்ல் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவினால் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்களினால் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, குறித்த சட்டமூலத்தின் சர்ச்சைக்குரிய சரத்துக்களை நிறைவேற்றுவதாயின், அவை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர்நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

































