Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
சகதியில் கடக்கும் மாணவர்கள்!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுண் நகைகளைத் திருடிய நபர் சிக்கினார்

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுண் நகைகளைத் திருடிய நபர் சிக்கினார்

ஞானசார தேரர் கைதில் சிறுபான்மையினரை தொடர்புபடுத்துவது கவலையளிக்கிறது

ஞானசார தேரர் கைதில் சிறுபான்மையினரை தொடர்புபடுத்துவது கவலையளிக்கிறது

அக்குறணையை அரை மணி நேரத்தில் புரட்டி எடுத்த கனமழை!

அக்குறணையை அரை மணி நேரத்தில் புரட்டி எடுத்த கனமழை!

ஜனாதிபதி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்!

ஜனாதிபதி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

செல்வராசா கஜேந்திரன் - அர்ச்சுனா இடையே காரசார விவாதம்!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

    Mobitel Inner 1278

    இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றும் ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் கூட ஆடாத ஒரு வீரர் தான் அபிமன்யு ஈஸ்வரன். இந்திய அளவிலான உள்நாட்டு முதல்தர கிரிக்கெட்டில் 8,600 ஓட்டங்களுக்கும் மேல் குவித்தும், பலமுறை தேசிய அணிக்குள் சென்றும் ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியின் பிளேயிங் 11-இலும் அபிமன்யு ஈஸ்வரன் ஆடவில்லை.


    கடந்த 2 ஆண்டுகளில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்ட போதிலும், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவே இல்லை. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் அவர் சேர்க்கப்படவில்லை.


    தற்போது இந்திய ஏ அணியில் இருந்தும் அவர் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். எனினும், பெங்கால் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரராக விளங்கும் அவர் தனது விடாமுயற்சியைத் தொடர்ந்து வருகிறார். சர்வீசஸ் அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பெங்கால் அணியின் அணி தலைவராக வழிநடத்தி 56 ஓட்டங்கள் அடித்த அபிமன்யு ஈஸ்வரன், தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.


    "ஒவ்வொரு முறை இந்திய அணி அறிவிக்கப்படும் போதும் என் பெயர் விடுபடுவதைப் பார்த்து, 'மறுபடியும் எனக்கு இடம் இல்லையா?' என்ற விரக்தி தோன்றுவது இயல்புதான். ஆனால் காலப்போக்கில் இதனை நான் பழகிக் கொண்டேன். எந்த அணிக்காக விளையாடினாலும் களத்தில் இறங்கி ஓட்டங்களை குவிப்பதே என் ஒரே கடமை" என்று தெரிவித்தார்.


    தொடர்ந்து பேசிய அபிமன்யு,


    "கிரிக்கெட் பேட்டைப் பிடித்த காலம் முதல் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம். அதே சமயம் எனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்து உருவாக்கிய பெங்கால் அணியை வழிநடத்துவதை பெருமையாகக் கருதுகிறேன். கடந்த 2019 - 20 ரஞ்சி கிண்ணத்தில் சவுராஷ்டிராவிடம் இறுதிப் போட்டியில் தோற்று கிண்ணத்தை நழுவவிட்டோம். இந்த முறை பெங்கால் அணிக்கு ரஞ்சி கிண்ணத்தை வென்று தருவதே எனது இலக்கு" எனக் கூறினார்.


    டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை அடித்து பெங்கால் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார் அபிமன்யு ஈஸ்வரன். தற்போது சர்வீசஸ் அணிக்கு எதிராக விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், தகுந்த திட்டத்துடன் நின்று 106 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்களை விளாசினார். கடினமான ஆடுகளத்தில் பெங்கால் அணி 184 ஓட்டங்களை எடுக்க உதவினார். தேர்வுக்குழுவினர் தொடர்ந்து புறக்கணித்தாலும், சளைக்காமல் தனது பேட் மூலமாக மட்டுமே ஈஸ்வரன் பதிலடி கொடுத்து வருகிறார்.