Oct 19, 2026 - 03:24 PM

ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் மிக பிரமாண்டமாக கடந்த வாரம் வெளிவந்த படம். இப்படம் உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ. 425+ கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் 2 தான் தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருந்த 1,000 கோடி ரூபா வசூல் படமாக இருக்கும் என நினைத்தார்கள்.
ஆனால், சன் நிறுவனமோ இந்த படத்தை 4 வாரத்தில் ஓடிடி இல் வெளியிட பெரிய தொகைக்கு இப்படத்தை அமேசானிடம் விற்க, வட இந்தியாவில் மல்டிப்ளக்ஸ் எதுவும் இப்படத்தை திரையிடவில்லை, இதனால் கிட்டத்தட்ட ரூ. 100 - 150 கோடி வசூல் அடிவாங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன் மூலம் கண்டிப்பாக இந்த முறையும் ரூ. 1,000 கோடி வசூல் இல்லை, முடிந்தவரை ரூ 800+ கோடி வசூல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.

































