Oct 21, 2026 - 06:56 PM

மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதிகளில் தொடர் மழை பெய்ததன் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் இன்று (21) திறக்கப்பட்டதாக மேல் கொத்மலை நீர்த்தேக்க பொறியாளர்கள் தெரிவித்தனர்.
நீர்த்தேக்க அணைக்குக் கீழே உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அப்பகுதிகளில் கனமழை பெய்தால் நீர்த்தேக்கத்தின் மற்ற நீர் வெளியேற்றும் கதவுகள் தானாகவே திறந்துவிடும் என்றும் நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
































