Oct 22, 2026 - 07:33 AM

டாப் ஹீரோயின் ஆக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த வருடம் பிப்ரவரியில் தான் அவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தற்போது காபி வித் கரண் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி 100 முறைக்கும் மேல் கேட்டார் ராஷ்மிகா என தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கும் மேலாக கெஞ்சி தான் திருமணம் நடந்தது என அவர் கூறி இருப்பதை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டா பேச்சு ராஷ்மிகாவை அவமானப்படுத்தும் வகையில் இருக்கிறது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
































