Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

சட்டவிரோத மது பாவனையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்!

 குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

குற்றத்தைத் தூண்டியவர்கள் சட்டத்தின் முன் நிற்பதில்லை!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்!

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

அதிகாலையில் கைவரிசையைக் காட்டிய திருடன்

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

மானம்பூ உற்சவம்

மானம்பூ உற்சவம்

பிரதி அமைச்சர் உறுதி!

பிரதி அமைச்சர் உறுதி!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

    Mobitel Inner 1278

    சவுதியில் பங்களாதேஷை சேர்ந்த இளம்ஜோடி தூக்கிலிடப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் இருவருக்கும் திருமண உறவு இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


    சவுதி அரேபியாவில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றிய பங்களாதேஷை சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் (வயது 22) மற்றும் ஸ்வீட்டி அக்தர் (25) ஆகிய இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    மெக்காவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு. கடந்த அக்டோபர் 14 ஆம் திகதி இளம் ஜோடியான இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


    சமூக வலைதளங்களில் இவர்கள் கணவன் - மனைவி என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், இருவரது குடும்பத்தினரும் இதனை மறுத்துள்ளனர். நஸ்ருல் இஸ்லாமின் தந்தை அப்துல் பஷீர் கூறுகையில்,


    வறுமையின் காரணமாகக் கடன் வாங்கித் தனது மகனைச் சவுதிக்கு அனுப்பியதாகவும், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.


    ஸ்வீட்டி அக்தரின் குடும்பத்தினர் கூறுகையில்,


    ஸ்வீட்டிக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாகவும், அவருக்கு 4 வயதில் பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்தனர். நஸ்ருல் இஸ்லாமைப் பற்றித் தங்களுக்குத் தெரியாது என்றும், ஸ்வீட்டி விரைவில் விடுதலையாவார் என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.


    இதற்கிடையே, மரண தண்டனை குறித்துத் தூதரகம் மூலம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததற்கு சவுதி அரசிடம் பங்களாதேஷ் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டாக்காவில் உள்ள சவுதி தூதரை நேரில் அழைத்து பங்களாதேஷ் விளக்கம் கேட்டுள்ளது.


    சவுதி அரசின் இந்த நட​வடிக்கை மனித உரிமை செயற்​பாட்​டாளர்​களாலும், பங்களாதேஷ் மக்​களாலும் கடுமையாக விமர்​சிக்​கப்​பட்டு வரு​கிறது.