Oct 23, 2026 - 11:40 AM

அனிருத் மற்றும் காவியா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் 21 ஆம் திகதி நடக்கவுள்ள நிலையில் பிரபலங்களுக்கு பத்திரிக்கை கொடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளார் கலாநிதி மாறன்.
இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல் பல பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், அனிருத் - காவியா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் விமரிசையாக நடைபெற 4 தனி விமானங்கள் தயார் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அவர்களின் திருமணம் குறித்து அனிருத்துடன் சேர்ந்து கல்லூரியில் படித்த நண்பரும் நடிகருமான பிஜார்ன் சுர்ராவ் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், கிரீஸில் எல்லாம் அனிருத் - காவியா திருமணம் நடக்கவில்லை, சென்னையில் தான் கல்யாணம் நடக்கப்போகிறது என்று அனிருத் நண்பர் பிஜார்ன் கூறியிருக்கிறார்.
































