Oct 24, 2026 - 08:24 PM

கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு மண்சரிவு முன்எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (24) பிற்பகல் 04.00 மணி முதல் நாளை (25) பிற்பகல் 04.00 மணி வரை அமுலில் இருக்கும்.
கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை, தெரணியகலை, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, அரநாயக்க மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவை மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எலபாத ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு மண்சரிவு முன்எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
































