Oct 25, 2026 - 08:01 PM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

வலிகாமம் வடக்கு பிரதேச சபை மற்றும் ‘விதையனைத்தும் விருட்சமே’ அமைப்பு இணைந்து முன்னெடுத்த பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் இன்று (25) காலை கீரிமலை பகுதியில் நடைபெற்றது.
இதன்போது, கீரிமலை நகுலேஸ்வர மகாவித்தியாலய முன்றலில் இருந்து கீரிமலை ஆலயத்தைச் சுற்றியுள்ள புனிதப் பிரதேசப் பகுதிகளில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் போத்தல்கள், பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் என்பன முற்றாக அகற்றப்பட்டு அப்பகுதி சுத்தப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் "விதையனைத்தும் விருட்சமே" அமைப்பின் உறுப்பினர்கள், வலி. வடக்கு பிரதேசசபை தவிசாளர் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள், இளவாலை Study Center, கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலயத்தினர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், கீரிமலை நகுலேஸ்வர சனசமூக நிலையத்தினர், கிராம மக்கள், தன்னார்வத் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
































