Oct 25, 2026 - 08:16 PM

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகள் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த நீர்த்தேக்கத்திலிருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 5,300 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் இன்று (25) நாள் முழுவதும் மழை பெய்துள்ளதாகவும், இதன் காரணமாக தற்போது நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் அருகிலும். அதன் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் கோரியுள்ளது.
































