Oct 26, 2026 - 10:46 AM
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்

ஹட்டன் பிரதேசத்தில் நேற்று (25) அதிகாலை நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.
ஹட்டன் நகரில் ஒரு சந்தி வீதியில் உள்ள 4 கடைகளுக்குள் புகுந்து, அங்கிருந்த பொருட்களையும் பணத்தையும் கைவரிசையை காட்டியுள்ளனர்.
குறித்த நகைக்கடைகள் மற்றும் சில்லரை விற்பனை நிலைய உரிமையாளர்கள் நேற்று ஹட்டன் பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹட்டன் பொலிராஸால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், ஹட்டன் நகரின் ஒரு சந்தி வீதியில் உள்ள மூன்று நகைக்கடைகள் மற்றும் ஒரு சில்லறை வர்த்தக நிலையங்களின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இக்கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகைக்கடைகளுக்குள் புகுந்த சந்தேக நபர், பாதுகாப்புப் பெட்டகத்தில் நகைகளை திருடுவதற்கு சமையல் எரிவாயு தீ குடுவையைப் பயன்படுத்தி அதைத் திறக்க முயன்று தோல்வியடைந்துள்ளார். எனவே, அவர் நகைக்கடைகளிலிருந்து நகை செய்யப் பயன்படுத்தப்படும் பல உபகரணங்களையும், சில்லறைக் கடையிலிருந்து ஒரு தொலைபேசி மற்றும் பல உணவுப் பொருட்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்தக் கடைத் திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை செய்யும் போது, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வி கிருஷ்ணன் கலைசெல்வி மற்றும் ஹட்டன் டிக்கோயா மாநகர சபை தலைவர் அசோகா கருணாரத்ன ஆகியோர் உடனிருந்தனர்.
சந்தேக நபரைக் கைது செய்வதற்காக, ஹட்டன் பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
































