Oct 27, 2026 - 05:30 AM

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (27) விடுமுறையை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அதேநேரம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
முன்பள்ளிச் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து முன்பள்ளிகளினதும் தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும் 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை, ஏற்கனவே திட்டமிட்டபடி உரிய பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அழகியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைக் குழுக்கள் முன்பே திட்டமிட்டபடி உரிய நிலையங்களில் நடைபெறும் என அனைத்துப் பரீட்சார்த்திகளுக்கும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பரீட்சார்த்திகள் உரிய வலையத்தின் வலையக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்கு:
உடனடி அழைப்பு இலக்கம் (Hotline): 1911
தொலைபேசி இலக்கங்கள்: 0112784208, 0112784537
தொலைநகல் (Fax): 0112784422
































