Oct 27, 2026 - 03:46 PM

வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களைக் குவித்தது.
அந்த அணி சார்பில் சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களையும் (5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்), பின் ஆலன் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 199 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பத்தை தந்தனர்.
அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 111 ஓட்டங்கள் (9 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள்) விளாசி களத்தை அதிர வைத்தார். அவருடன் இணைந்து துடுப்பாடிய வைபவ் சூரியவன்ஷி 19 பந்துகளில் 45 ஓட்டங்கள் குவித்தார்.
இறுதியில் நமன் திர் (4 ஓட்டங்கள்) மற்றும் திலக் வர்மா (1 ஓட்டம்) களத்தில் இருக்க, இந்திய அணி 13.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.
40 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இந்தியா இந்த பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்து, 5 போட்டிகளைக் கொண்ட தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் வெற்றுள்ளது.

































