Oct 27, 2026 - 03:56 PM

டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தீர்வுகள் வழங்குனரான SLT-MOBITEL, www.busticket.gov.lk இணையத்தளத்தின் டிஜிட்டல் தள சேவை வழங்குனர் எனும் வகையில், ஸ்மார்ட்டான இயங்குதன்மையை வலுப்படுத்தும் புரட்சிகரமான முன்முயற்சியுடன் இலங்கையின் பேருந்துப் போக்குவரத்துப் பயணத்தின் பரிணாம வளர்ச்சிக்குத் தளமமைக்கின்றது.
அனைத்து இலங்கையர்களுக்குமான அறிவார்ந்த, டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து அனுபவத்தை உருவாக்கும் வகையில், தொழில்நுட்பத்தையும் சேவைப் புதுமையாக்கத்தையும் ஒன்றிணைக்கும் SLT-MOBITEL இன் தொலைநோக்குப் பார்வையை இம்முன்முயற்சி மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. டிஜிட்டல் வசதியைச் செயல்பாட்டுத் திறனுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், நாட்டின் போக்குவரத்து அமைப்பை எதிர்காலத்திற்கு ஏற்ப மறுசீரமைப்பதில் SLT-MOBITEL தீவிரமாகப் பங்களித்து வருகின்றது.
பங்குதாரர்கள் பங்கேற்பு மற்றும் அங்கீகார நிகழ்வு சமீபத்தில் அமரி கொழும்பு ஹோட்டலில் நடைபெற்றது. போக்குவரத்து அமைப்பின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும், சாதனைகளைக் கொண்டாடுவதாகவும், டிஜிட்டல் பேருந்துப் பயணச்சீட்டு சேவையின் எதிர்காலத்தை ஆராய்வதாகவும் அமைந்தது.
இந்நிகழ்வில் போக்குவரத்துத் துறை பிரதி அமைச்சர் கலாநிதி. பிரசன்ன குணசேன கலந்து கொண்டார். SLT‑MOBITEL சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்களுடன், நீண்ட தூர மற்றும் அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவை வழங்குனர்களும் பங்கேற்றிருந்தனர்.
டிஜிட்டல் கட்டமைப்பு சேவை வழங்குனர் எனும் வகையில், பயணிகளுக்கு நம்பகமான, திறமையான மற்றும் இலகுவில் அணுகக்கூடிய ஒன்லைன் பேருந்துப் பயண அனுபவத்தை வழங்குவதோடு, போக்குவரத்து அதிகாரசபைகள் மற்றும் பேருந்து உரிமையாளர்களின் தரவு சார்ந்த செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், SLT-MOBITEL நிறுவனம் www.busticket.gov.lk இணையத்தளத்தின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி வருகின்றது.
இந்நிகழ்வு, சேவைத் தளத்தின் செயற்பாட்டுச் சிறப்பம்சங்கள், வெற்றிக் கதைகள், சிறப்பாகச் செயற்பட்ட பேருந்து உரிமையாளர்களைக் கௌரவித்தல் மற்றும் புதிய தொழில்நுட்ப அம்சங்களின் செயல்விளக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்ததுடன், நாடளாவிய ரீதியில் பேருந்து உரிமையாளர்களிடையே டிஜிட்டல் பயன்பாட்டை மேலும் விரிவாக்குவதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்தது.
பேருந்துப் பயணச்சீட்டு சேவைத் தளப் பங்குதாரர்கள் பங்கேற்பு மற்றும் அங்கீகார நிகழ்வு மற்றும் www.busticket.gov.lk இணையத்தளம் ஆகிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், SLT-MOBITEL இலங்கையின் பேருந்துப் பயண உட்கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தி வருவதோடு, வீதியிலிறங்கும் ஒவ்வொரு பயணிக்கும் பேருந்து உரிமையாளருக்கும் அறிவார்ந்த மற்றும் சிறந்த முறையில் இணைக்கப்பட்ட அனுபவங்களை உறுதி செய்கின்றது.
































