Oct 29, 2026 - 05:28 PM

உலகின் முன்னணி வர்ணப்பூச்சு மற்றும் மேற்பூச்சு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அக்ஸோநோபெல் [AkzoNobel] இலங்கையில் டியூலக்ஸ் [Dulux] வர்ணப்பூச்சுகளை உற்பத்தி செய்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள வர்ணம் தீட்டுபவர் சமூகத்தினரின் அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் கௌரவிக்கும் வகையில், ‘பிந்தாரு பிரணாம’ [‘Pintharu Pranama’] எனும் புதிய திட்டத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
செப்டெம்பர் 18ஆம் திகதி வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சிறப்புக் கௌரவிப்பு நிகழ்வில், நாடு முழுவதிலுமிருந்து திறமையான வர்ணம் தீட்டுபவர்கள் பங்கேற்றனர். AkzoNobel நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிவரும் வர்ணம் தீட்டுபவர் சமூகத்தினருக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன், Dulux வர்த்தக நாமத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கை, விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டி கௌரவிப்பதும் இந்நிகழ்வின் நோக்கங்களாக அமைந்திருந்தது.
AkzoNobel பெயிண்ட்ஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் [AkzoNobel Paints Lanka (Pvt) Ltd] நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அமில இந்திக இது தொடர்பாக தெரிவிக்கையில், “எமது வர்ணம் தீட்டுபவர் சமூகத்தினரின் நிபுணத்துவம், கைவினைத்திறன் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இல்லாமல், Dulux தயாரிப்புகளின் உண்மையான தரத்தையும் அழகையும் வெளிப்படுத்துவது சாத்தியமற்றதாகும். AkzoNobel நிறுவனம் எப்போதும் தனது வர்ணம் தீட்டுபவர்கள் அனைவரினதும் பங்களிப்புக்கு மதிப்பளித்து வந்துள்ளது. ‘பிந்தாரு பிரணாம’ திட்டத்தின் ஊடாக, வர்ணம் தீட்டுபவர் சமூகத்தினருக்கு Dulux கொண்டுள்ள அளவற்ற நன்றியைத் தெரிவிப்பதுடன், அவர்களைத் தொடர்ந்து அங்கீகரித்து, பாராட்டி, வலுப்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்த விரும்புகிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, வர்ணம் தீட்டுபவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிறந்த வாழ்க்கையையும் ஒளிமயமான எதிர்காலத்தையும் உருவாக்க உதவும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதே எமது முக்கிய நோக்கமாகும்” என்றார்.
இந்த நிகழ்வில், எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தயாரிப்புகள், ஊக்குவிப்புப் பிரசாரங்கள் மற்றும் Dulux வர்ணம் தீட்டுபவர் செயலியின் [Dulux Painter App] இரண்டாம் கட்ட மேம்பாடுகள் தொடர்பான பிரத்தியேக விளக்கங்கள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.தனது பங்குதாரர்களின் நீண்டகால நலன் மற்றும் பாதுகாப்பில் நிறுவனம் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் வகையில், நிகழ்வின் இறுதியில், தெரிவுசெய்யப்பட்ட 50 முன்னணி வர்ணம் தீட்டுவோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விரிவான காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
தனது பங்குதாரர்களின் நலன், நிதி வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை மேம்பாடு ஆகியவற்றுக்கு AkzoNobel நிறுவனம் வழங்கிவரும் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. திறமையும் அர்ப்பணிப்பும் மிக்க வர்ணம் தீட்டுபவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில், அவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வுகள், தொடர்பாடல் மற்றும் பங்கேற்பை ஊக்குவிக்கும் திட்டங்கள், மேலதிக நன்மைகளை வழங்கும் வாய்ப்புகள் எனப் பல்வேறு முயற்சிகளை நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
இவ்வாறு Dulux மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள், வர்ணம் தீட்டுபவர்கள் சமூகத்தினருக்கு அர்த்தமுள்ள நன்மைகளையும் மதிப்பையும் வழங்குவதில் Dulux கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன. நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வர்ணம் தீட்டுபவர்கள் உடனான உறவை மேலும் வலுப்படுத்துவதுடன், நிறுவனத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய இந்தச் சமூகத்தினருடன் இணைந்து தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கும் இத்திட்டங்கள் வழிவகுக்கின்றன.
தனது வளர்ச்சிப் பயணத்தில் மிக முக்கியமான பங்காளிகளாக விளங்கும் வர்ணம் தீட்டுபவர் சமூகத்தினரின் நலனில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், வளர்ச்சி, சிறப்புத்துவம் மற்றும் நிலையான வெற்றி ஆகியவற்றை நோக்கிய ஒன்றிணைந்த பயணத்தை Dulux மேலும் வலுப்படுத்துகிறது.
கடந்தகால சாதனைகளைக் கௌரவிப்பதுடன், இணைந்து ஒளிமயமானதும் வளமானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய பாதையைத் திறக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக ‘பிந்தாரு பிரணாம’ திட்டம் திகழ்கிறது. இது Dulux நிறுவனத்திற்கும் வர்ணம் தீட்டுவோர் சமூகத்தினருக்கும் இடையிலான நீண்டகால உறவையும் பரஸ்பர நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகிறது.
































