Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

மன்னார் சாந்திபுரத்தில் நள்ளிரவில் இடி மின்னல் தாக்குதல்!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

ஹட்டன் நகரில் பாரிய திருட்டு!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

சபையில் அர்ச்சுனா அதிரடி!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

பிரம்மாண்ட கிறிஸ்மஸ் கேக் கலவை விழா!

    Mobitel Inner 1278

    நடிகர் தனுஷ் அரசியலில் அடியெடுத்து வைக்க இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்கு வலு சேர்க்கும் விதமாக மாணவர்களை குறிவைத்து அவர் முன்னெடுப்புகளை எடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    முதலமைச்சர் விஜயை தொடர்ந்து நடிகர் தனுஷும் அரசியல் பிரவேசம் காணவுள்ளதாகத் தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தனுஷின் செயல்பாடுகளும் அவரது அடுத்தகட்ட நடவடிக்கைகளும் அமைந்து வருகின்றன. கடந்த ஜூலை மாதம் திருவள்ளூர் மாவட்டம், மஞ்சங்கரணையில் தன்னுடைய பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினார் தனுஷ். மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை, இலவச ஆட்டோக்கள் வழங்கல், ரசிகர்கள் ரத்ததானம் என விழா களைகட்டியது.


    தொடர்ந்து, அக்டோபர் 14 ஆம் திகதி கோவையில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ரசிகர் மன்றத்தை தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றியதுடன், கொடி மற்றும் இலச்சினையும் வெளியிடப்பட்டது. முதலமைச்சர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றி, அதை வெற்றிகரமாக அரசியல் கட்சியாக மாற்றிய இதே பாணியைப் பின்பற்றி, தனுஷும் தனது ரசிகர் மன்றங்களை 'தனுஷ் நற்பணி இயக்கம்' என்று பெயர் மாற்றம் செய்திருப்பதாக கூறப்பட்டது.


    இந்த பரபரப்புக்கு மத்தியில் டெல்லி பயணத்தை முடித்து சென்னை திரும்பிய தனுஷ், சென்னை செம்மஞ்சேரியில் 2,000-க்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகளைத் திரட்டி பிரமாண்ட சந்திப்பை நடத்தினார். இதில், பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த இரண்டாயிரத்துக்​கும் மேற்​பட்ட பெண்​கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தாமரை சின்னம் பொறித்த வெள்ளி காமாட்சி விளக்கு பரிசளிக்கப்பட்டது பேசுபொருளானது.


    தற்போது அடுத்தக்கட்ட நகர்வாக 234 தொகுதிகளிலும் 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏசி வசதியுடன் டியூஷன் சென்டர் அமைக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தலா 3 ஆசிரியர்கள் மற்றும் ஒரு உதவியாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அவர்களுக்கான ஊதியத்தை நற்பணி இயக்கம் சார்பில் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


    முதற்கட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் மட்டும் இந்த மையங்கள் அமைக்கப்பட்டு, பின்னர் 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகளை ஜனவரி மாதம் முதல் தொடங்க தனுஷ் நற்பணி இயக்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், முன்பு மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கியது மற்றும் இரவு நேரப் பாடசாலைகளைத் தொடங்கியதைப் போலவே, தற்போது தனுஷும் மாணவர் நலன் சார்ந்த இந்த திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்.


    234 சட்டமன்ற தொகுதிகளிலும் டியூசன் மையங்கள் அமைக்க திட்டமிட்டிருப்பது தனுஷ் அரசியலில் கால்பதிக்க அச்சாரமிடுவதாகவே பார்க்கப்படுவதாகவும், 2031 சட்டமன்றத் தேர்தலைக் கவனத்தில் கொண்டு, தற்போதைய பள்ளி மாணவர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த இலவச டியூஷன் சென்டர் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.