Oct 30, 2026 - 03:10 PM

பாதுக்கை மீபே பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (30) ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக அருகிலுள்ள வீடு ஒன்றிற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் மசகு எண்ணெய் சேமிப்பதற்காக, ஏல விற்பனையில் வாங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து அகற்றப்பட்ட தாங்கி ஒன்றில் இருந்த எரிபொருளை அகற்றாமல், எரிவாயு மூலம் வெட்டி சரிசெய்ய முயன்றபோதே இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வெடிப்பினால் இரண்டு ஆண் ஊழியர்கள் காயமடைந்துள்ளதுடன், மற்றொரு பெண் ஊழியரின் தலையில் ஓடு விழுந்ததில் அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பாக பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
































