Nov 1, 2026 - 09:14 AM

உலகின் மிகப்பெரிய கிரிப்டோ நாணய பரிவர்த்தனை நிறுவனமான பைனான்ஸ் (Binance), தனது தளத்திலிருந்து திருடப்பட்ட 6.3 பில்லியன் அமெரிக்க டொலரில், 6 பில்லியன் டொலரை, நிறுவனத்தின் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி மாற்று டோக்கன்களை கொள்வனவு செய்ததன் மூலம் ஈடுசெய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த பாரிய சைபர் தாக்குதலை வடகொரிய அரசின் ஆதரவு பெற்ற 'டிரேடர்ட்ரைட்டர்' (TraderTraitor) என்ற அமைப்பு நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
"சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இழப்புத் தொகையில் 6 பில்லியன் அமெரிக்க டொலரை தாம் ஏற்கனவே ஈடுசெய்துவிட்டதாக எக்ஸ் (X) தளத்தில் பைனான்ஸ் பதிவிட்டுள்ளது.
முன்னதாக, திருடப்பட்ட நிதியில் 90% தொகையை ஈடுசெய்துவிட்டதாக அந்நிறுவனம் கூறியிருந்தது.
மீதமுள்ள தொகை (தற்போது 10%-க்கும் குறைவானது) பணப்புழக்கம் குறைந்த சொத்துக்களாக இருப்பதால், தேவையான அளவுகளில் அவற்றைப் பெறுவதற்குக் மேலதிக காலம் ஆகலாம் என்று பைனான்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு வடகொரிய அரசின் ஆதரவு பெற்ற 'டிரேடர்ட்ரைட்டர்' என்ற அமைப்பே காரணம் என்று அமெரிக்க ஃபெடரல் புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.
உளவு பார்த்தல், நிதித் திருட்டு மற்றும் வருமானம் ஈட்டுவதற்காக அரசுடன் தொடர்புடைய சைபர் பிரிவுகளைப் பயன்படுத்துவதை வடகொரியா பல ஆண்டுகளாக மறுத்து வருகிறது.
ஜெனீவாவில் உள்ள அதன் தூதரகமும் சீனாவில் உள்ள தூதரகமும் இது தொடர்பான கருத்துக்கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவில்லை.
திருடப்பட்ட சொத்துக்களை 'எதேரியம்' (Ethereum) என்ற கிரிப்டோகரன்சியாக இந்தப் பிரிவின் உறுப்பினர்கள் மாற்றுவதை கவனித்துள்ளதாக FBI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், தொடர்புடைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்தச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ய அவர்கள் முயலக்கூடும் என்றும் FBI எச்சரித்துள்ளது.
































