Nov 2, 2026 - 10:22 AM
By யாழ். நிருபர் பிரதீபன்
By யாழ். நிருபர் பிரதீபன்

ஊர்க்காவற்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அனலைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி இராமச்சந்திரன் உத்தியோகத்தர் மயூரன் தலைமையிலான குழு அனலைதீவு ஆறாம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடொண்டில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது இரண்டு வாள்களுடன், 20 வயது இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொலிஸாரை கண்டவுடன் ஒரு வாளை கிணற்றுக்குள் வீசியதாகவும், அதனை அந்த இளைஞரை கொண்டு கிணற்றுக்குள் இறக்கி எடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேக நபரை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் ஊடாக நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
































