Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

நிவாரணம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா?

நில்லம்பை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு!

நில்லம்பை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு!

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!

பண்ணையாளர்களின் நீதிகோரி வீதியில் திரண்ட மக்கள்

பண்ணையாளர்களின் நீதிகோரி வீதியில் திரண்ட மக்கள்

நிகழ்நிலை காப்புச் சட்டம்

நிகழ்நிலை காப்புச் சட்டம்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

பண்ணையாளர்களுக்கு பாதிப்பின்றி தீர்வு காண்போம்!

பண்ணையாளர்களுக்கு பாதிப்பின்றி தீர்வு காண்போம்!

 வட்டவளையில் விசேட திடீர் சோதனை

வட்டவளையில் விசேட திடீர் சோதனை

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

    Mobitel Inner 1278

    2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள லீக் போட்டியைக் காண்பதற்காக உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

     
    தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் அக்டோபர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்காக இதுவரை 84 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தெரிவித்துள்ளது. ஒரே ஒரு போட்டிக்கு இவ்வளவு அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்திருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


    இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ள ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள புகழ்பெற்ற வாண்டரர்ஸ் (The Wanderers) மைதானத்தில் சுமார் 34,000 ரசிகர்கள் மட்டுமே அமர்ந்து போட்டியைக் காண முடியும். ஆனால், இந்தப் போட்டியைக் காண்பதற்காக 84,00,000 இற்கும் அதிகமான டிக்கெட் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.


    அதாவது, ஒரு இருக்கைக்கு சுமார் 247 பேர் என்ற அளவில் போட்டி நிலவுகிறது. இதனால் டிக்கெட் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    இந்தியா – பாகிஸ்தான் போட்டி மட்டுமின்றி, 2027 உலகக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியைக் காணவும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நவம்பர் 21 ஆம் திகதி இதே வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு இதுவரை 79 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

     
    2027 உலகக் கிண்ணத்திற்கான டிக்கெட் முன்பதிவு விண்ணப்பங்கள் அக்டோபர் 01 ஆம் திகதி தொடங்கிய நிலையில், நவம்பர் 01 ஆம் திகதி நிலவரப்படி உலகம் முழுவதும் இருந்து 12 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.


    மொத்தம் 193 நாடுகளைச் சேர்ந்த சுமார் 28 லட்சம் தனிப்பட்ட ரசிகர்கள் டிக்கெட் குலுக்கலில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர்.

    இதுவரை 3.2 கோடிக்கும் அதிகமான போட்டி சார்ந்த டிக்கெட் பதிவுகள் கிடைத்துள்ளன. இந்தப் போட்டித் தொடருக்கான விண்ணப்பங்களில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் முன்னிலையில் உள்ளனர்.


    குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் சுமார் 1.49 கோடி டிக்கெட் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.


    2027ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் திகதி தொடங்கும் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நவம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து இந்தத் தொடரை நடத்துகின்றன 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு 24 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ண நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


    ஐசிசி அறிவித்துள்ள நடைமுறையின்படி, ரசிகர்கள் டிக்கெட் குலுக்கலில் இலவசமாகப் பதிவு செய்யலாம். அதிக விண்ணப்பங்கள் கிடைக்கும் போட்டிகளுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இது முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முறை அல்ல. வெற்றி பெறும் ரசிகர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும்.


    மொத்தத்தில், 34 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அமரக்கூடிய மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டியைக் காண 84 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்திருப்பது, இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு உலகளவில் இருக்கும் வரவேற்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.