Nov 4, 2026 - 10:38 AM

தமிழ் எழுத்தாளர் இரா. முருகன் உடல்நலக்குறைவால் தனது 74 வயதில் காலமானார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என பல வகை எழுத்திலும் தொடர்ச்சியாக பங்களிப்பை செய்தவர்.
உன்னை போல் ஒருவன், பில்லா 2 ஆகிய திரைப்படங்களில் எழுத்தாளராக பணியாற்றியவர் இரா. முருகன். 'மறதி ஒரு தேசிய வியாதி', 'என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா' போன்ற வசனங்களை இவர்தான் எழுதியுள்ளார்.
உள்ளூர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பிரபலமான தமிழக வீரர் அஸ்வின் முருகன் இவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் எழுத்தாளர் இரா. முருகன் உடல்நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி திரையுலகிற்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது நண்பர் இரா. முருகன் மறைவுக்கு தனது X பக்கத்தில் கனத்த இதயத்துடன் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
































