Nov 5, 2026 - 06:59 AM

நாட்டிற்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் மீன்பிடிப் படகும் சந்தேகநபர்களும் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட விசேட கடற்படை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் கூடிய உள்நாட்டு நெடுநாள் மீன்பிடிப் படகொன்று இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் வைத்து நேற்று (04) கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டது.
குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அதில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் சுமார் 10 பொதிகள் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகும் சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் இன்று (05) காலை திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.
































