Nov 5, 2026 - 08:27 AM

கப்பத் தொகையாக 10 லட்சம் ரூபாய் பணத்தைக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் மத்திய குற்றத் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று (04) ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உனவட்டுன பகுதியில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு இக்கப்பத் தொகையைக் கோரியதாக மத்திய குற்றத் தடுப்புப் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 36 மற்றும் 19 வயதுடைய உனவட்டுன பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
இச்சந்தேகநபர்கள் அப்பகுதியின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாக தம்மை அடையாளப்படுத்தி இத்தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு இவ்வாறு கப்பப் பணம் கேட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மத்திய குற்றத் தடுப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
































