Nov 6, 2026 - 11:53 AM

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமான Atlas Axillia, நாலந்த கல்லூரியுடன் இணைந்து Tinkering Lab ஐ நாலந்த புத்தாக்க மையத்தில் நிறுவியுள்ளது. அதனூடாக இலங்கையின் இளைஞர்களுக்கு தொழில்னுட்ப ரீதியில் இயங்கும் எதிர்காலத்திற்கு தயார்ப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன், இந்தியாவின் Atal Innovation Mission - NITI Aayog ஆகியவற்றின் தொழில்நுட்ப நிபுணத்துவ ஆதரவோடு, Atlas Axillia மற்றும் கொழும்பு நாலந்த கல்லூரி இணைந்து இம்முயற்சியை முன்னெடுத்துள்ளன. நாலந்த கல்லூரியின் நூற்றாண்டு விழா கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள இந்த மையம், நேரடியாகப் பரிசோதித்து அறியக்கூடிய STEM மற்றும் கலைசார் கற்றலை நேரடியாகப் பாடசாலைச் சூழலுக்குள் கொண்டு வருகின்றது. அறிவியல் கோட்பாடுகளைப் படைப்பாற்றல் ஆய்வு மற்றும் தொழில்முனைவோருடன் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த ஆய்வகம் பாடப்புத்தகக் கோட்பாட்டிற்கும் நடைமுறைப் பயன்பாட்டிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கின்றது. அத்துடன், Robotics, AI மற்றும் Design Thinking ஆகியவற்றின் ஊடாக மாணவர்கள் புதிய பரிசோதனைகளை மேற்கொள்ளவும், நிஜ உலகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உருவாக்கவும் வளங்கள் நிறைந்த ஒரு களத்தை இது வழங்குகின்றது.
இந்த அறிமுகம் தொடர்பில் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி அஷிஷ் சந்திரா கருத்துத் தெரிவிக்கையில், “நமது பிள்ளைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தைச் சிற்பமாக வடிவமைப்பதற்கான கருவிகளையும் நம்பிக்கையையும் வழங்குவதிலேயே உண்மையான அதிகாரமளித்தல் தொடங்குகின்றது. Atlas Axillia பல தலைமுறைகளாக அடிப்படை கற்றல் கருவிகளுடன் இலங்கை பாடசாலை மாணவர்களுடன் இணைந்து பயணித்து வருகின்றது. Tinkering Lab ஆய்வகம், மாணவர்களின் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் மீள்திறன் ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம் அந்தப் பயணத்தின் ஒரு இயற்கையான பரிணாம வளர்ச்சியைக் குறிக்கின்றது. மாணவர்கள் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், தங்களது யோசனைகளை நிஜ வடிவக் மாதிரிகளாக மாற்றவும், தொழில்முனைவோர் சிந்தனைப்போக்கை வளர்க்கவும் சுதந்திரம் அளிப்பதன் மூலம், இம்முயற்சி, இலங்கைக்குத் தேவையான நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்போரை உருவாக்க உதவுகின்றது.” என்றார்.
நாலந்த புத்தாக்க மையம் என்பது ஒரு ஆரம்ப யோசனையை உருவாக்குவதிலிருந்து, அதன் நிஜ வடிவக் மாதிரியை உருவாக்கி, பூர்த்தியடைந்த கருத்தாக்கத்தைச் சமர்ப்பிப்பது வரையிலான புதுமைப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மாண வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வசதிகளில் சுயமாகச் செய்து பார்க்கும் DIY புதுமை ஆய்வகம், 3D அச்சிடுதல் மற்றும் டிஜிட்டல் உற்பத்திக்கான உபகரணங்களைக் கொண்ட மேம்பட்ட உற்பத்தி ஆய்வகம் மற்றும் பெருக்கப்பட்ட மற்றும் மெய்நிகர் உண்மைத் தொழில்நுட்பம், கலைகள் மற்றும் விவசாயத் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட பிரத்தியேக இடங்கள் ஆகியவை அடங்கும்.
தொழில்நுட்ப வசதிகளுக்கு மேலதிகமாக பயிற்சிப் பகுதிகள், இணைந்த பணி இடங்கள், கூட்டாண்மை சந்திப்பு அறை மற்றும் முன்மொழிவு உரை அரங்கு (Pitch suite) ஆகியவையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இணைந்து மாணவர்களின் தொடர்பாடல், குழுப்பணி, திட்ட முகாமைத்துவம் மற்றும் தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்த உதவுவதுடன், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் புதிய தொழில்முனைவோர் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.
இந்த இணைந்த செயற்பாட்டை பாராட்டி இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கருத்துத் தெரிவிக்கையில், “இந்தக் கூட்டாண்மை, கல்வி, அறிவியல் மற்றும் புதுமைப் படைப்புகள் ஊடாக நமது இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கான எமது பகிர்ந்தளிக்கப்பட்ட விருப்பங்களையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது. இந்தியாவின் Atal Innovation Mission இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான பாடசாலைகளில் ஆர்வம் சார்ந்த கலாசாரத்தை நாடு தழுவிய ரீதியில் உருவாக்கியுள்ளது. நாலந்த கல்லூரிக்கும் Atlas நிறுவனத்திற்கும் இடையிலான இக் கூட்டாண்மை, இலங்கையின் இளம் திறமையாளர்களின் நலனுக்காக Atal Innovation Mission இடமிருந்து தொழில்நுட்ப நிபுணத்துவம், சிறப்பு பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிக்கான ஆதரவு ஆகியவற்றைக் கொண்டுவரும் என்பதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இம்முயற்சி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஆற்றலைப் பயன்படுத்தி, ஆர்வமிக்க இளம் மனங்களைப் புதுமையின் முகவர்களாக உருவெடுக்க ஊக்குவிக்கும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.
நாலந்த கல்லூரியின் பழைய மாணவரும், நாலந்த கல்லூரி நூற்றாண்டு விழாக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி மஹேல ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “நாலந்த கல்லூரி கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் தடையற்ற சாதனைகளின் ஒரு நூற்றாண்டைக் குறிக்கும் இந்த வேளையில், அடுத்த நூறாண்டுகள் கோரும் தேவைகளை முன்னோக்கிப் பார்ப்பதே எமது பொறுப்பாகும். உலகம் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் மாற்றமடைந்து வருகின்றது. எனவே எமது மாணவர்களின் மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் தம்மை மாற்றியமைக்கும் திறன், குழுப்பணி மற்றும் படைப்பாற்றல் துணிச்சல் ஆகிய ஆற்றல்களுடன் பட்டம்பெற்று வெளியேற வேண்டும். நாலந்தா புத்தாக்க மையத்தில் உள்ள Tinkering Lab ஆய்வகம், எமது மாணவர்கள் தமது துணிச்சலான யோசனைகளைப் பரிசோதிக்கவும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளவும், AI ஆதிக்கம் செலுத்தும் உலகிற்குத் தலைமை தாங்குவது எவ்வாறெனக் கற்றுக்கொள்ளவும் ஒரு உலகத் தரம் வாய்ந்த தளத்தை வழங்குகின்றது.” என்றார்.
இலங்கையின் பாடசாலைகளில் பிரத்தியேக STEM வசதிகளுக்கான வாய்ப்புகள் இன்னும் வரம்பிற்குட்பட்டதாக இருக்கும் நிலையில், கல்வி நிறுவனங்கள், தொழில்துறைப் பங்காளிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு இடையிலான கூட்டாண்மை, செயல்முறை சார்ந்த, தொழில்நுட்ப அடிப்படையிலான கல்விக்கான அணுகலை எவ்வாறு விரிவுபடுத்துகின்றது என்பதை நாலந்த புத்தாக்க மையத்தில் உள்ள Tinkering Lab தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
































