Nov 6, 2026 - 05:05 PM

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான சீன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சீன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.
சீன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள், டிஜிட்டல் தளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இணையதளங்களில் வெளியிடப்படுவது மட்டுமல்லாமல், காட்சிகளை பதிவு செய்து வீடியோ கிளிப்புகள், பாடல் காட்சிகளை இணையதளங்களில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியம் வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.பி.பாலாஜி, சீன் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடவும், படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களை பதிவுசெய்து சமூக ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
































