Nov 8, 2026 - 08:41 AM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
36 வயதான மொஹமட் ஷமி, கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
சரியாக 13 ஆண்டுகள் நிறைவடைந்த அதே நாளில் (6) சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
தனது ஓய்வு குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷமி, "எனது வெள்ளை நிற சீருடையை கழற்றி வைக்கிறேன், ஆனால் அதனுடன் தொடர்புடைய நினைவுகள் எப்போதும் என் மனதை விட்டு அகலாது. இந்தியாவின் டெஸ்ட் சீருடையை முதன்முதலில் அணிந்த போது, நாட்டுக்காக ஏதேனும் ஒரு பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற ஒரே கனவுதான் என் மனதில் இருந்தது" என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினாலும், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகள் உள்ளிட்ட வெள்ளைப் பந்து (White-ball) கிரிக்கெட் போட்டிகளிலும், ஐபிஎல் தொடர்களிலும் அவர் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
































